Home  |  திரை உலகம்

தகராறு - திரை விமர்சனம் !!

நடிகர் : அருள்நிதி

 

நடிகை : பூர்ணா

 

இசை : தரன், பிரவீன் சத்யா

 

இயக்கம் : கணேஷ் விநாயக்

 

படத்தில் அருள்நிதி, பவன் உள்ளிட்ட நான்கு பேர் நண்பர்கள். பகலிலேயே வீடு புகுந்து திருடுவது அவர்களின் தொழில். போலீஸ் இன்ஸ்பெக்டரின் வீட்டிலேயே திருடிவிட, இன்ஸ்பெக்டருடன் இவர்களுக்கு தகராறு. ஒரு லோக்கல் தாதாவிடம் மோதியதால் அவருடனும் தகராறு. கந்துவட்டி தாதாவின் பெண்ணான பூர்ணா-அருள்நிதி காதலால், கந்துவட்டி தாதாவுடனும் தகராறு. திடீரென அருள்நிதியின் நண்பர்கள் மேல் நடக்கும் கொலை முயற்சியில், ஒரு நண்பன் கொல்லப்படுகிறார். அதைச் செய்தது யார்? அதை இவர்கள் கண்டுபிடித்தார்களா? கண்டுபிடித்து...? 

 

மதுரையைக் கதை களமாகக் கொண்டு ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்பதே ஒரு ஆச்சரியம் தான். படத்தின் முதல் காட்சியிலேயே கொலை விழுகிறது. அடுத்த காட்சியில் ஃப்ளாஷ்பேக் ஆரம்பித்து, நான்கு நண்பர்களின் கதையைச் சொல்கிறார்கள். புதுப்புது டெக்னிக்களுடன் திருடுவது சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும், இப்படி திருட்டை நியாயப்படுத்தலாமா என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது. லாரியில் அடிபட்டுக்கிடக்கும் பூர்ணாவை அருள்நிதி காப்பாற்றும் காட்சி அருமை. அடுத்து இருவருமே அடுத்தவர் முகத்தை மறந்துவிட, உன்னை எங்கேயே பார்த்திருக்கேனே என்று படம் முழுக்க யோசித்துக்கொண்டே இருப்பது யதார்த்தம் + செம ரகளை. 

 

மூன்று தகராறுகளில் சிக்குவதை இடைவேளைக்கு முன்பே சொல்லிவிட்டு, இடைவேளைக்குப் பின் நான்காவது தகராறை சஸ்பென்ஸ் த்ரில்லர் போன்று கொண்டுபோகிறார்கள். இவராக இருக்குமோ, அவராக இருக்குமோ என்று நாமும் யூகித்தபடியே இருக்கிறோம். கொலையாளி ஒரு லெப்ட் ஹேண்ட் என்று க்ளூ கிடைத்த பின் பார்த்தால், இன்னொரு நண்பன், தாதா, கொலைகாரன், கொலைகாரனை ஏவிய ஆள் நான்கு பேருமே லெஃப்ட் ஹேண்டாக இருக்கிறார்கள். இவரில்லை, இவரில்லை என கண்டுபிடித்துக்கொண்டே போகும் காட்சிகளில் நல்ல விறுவிறுப்பு. ஆனால்...

 

த்ரில்லர் கதையில் சஸ்பென்ஸை உடைப்பது ஒரு கலை. அதை சமர் படத்தை அடுத்து இதிலும் கோட்டை விடுகிறார்கள். நண்பர்களே கொலையாளியை புத்திசாலித்தனத்தால் கண்டுபிடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இங்கே கொலையாளியே நேராக வந்து நின்று கொண்டு ‘ஆமாண்டா..நாந்தான் கொன்னேன்’ என்று சொல்லும்போது சப்பென்று ஆகிறது. அதையடுத்து கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளுடன் படத்தை முடிக்கிறார்கள். அவர் தான் கொலையாளி என்பதற்கு படத்தில் முதலில் இருந்தே நிறைய க்ளூ இருக்கிறது. அந்த க்ளூவை வைத்து, ஹீரோ கொலையாளியை கண்டுபிடிப்பதாக வந்திருந்தால், ஒரு திருப்தி வந்திருக்கும். 

 

 

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்கும் அருள்நிதி இந்த படத்தில் எந்த படத்திலும் இல்லாதது போல் கலகலப்பான ஹீரிவாக வந்து போகிறார். ஹீரோயின் பூர்ணாவை விரட்டி விரட்டி லவ் பண்ணும் காட்சிகள் செம.......

 

பூர்ணாவுக்கு இது முக்கியமான படம். வெறுமனே டூயட் ஆடும் ஹீரோயினாக இல்லாமல், மதுரைப் பெண்ணை கண்முன்னே கொண்டுவருகிறார். ஒரு கந்துவட்டி பார்ட்டியின் மகளாக, காலேஜ் ஸ்டூடண்ட்டாக, பிடிவாதக்காரராக, ஹீரோவின் காலைப்பிடித்து காதலுக்காக கெஞ்சுபவராக என நடிப்புக்கு தீனி போடும் கேரக்டர். கலக்கியிருக்கிறார்.  

 

கதையே நான்கு நண்பர்களைப் பற்றியது தான் என்பதால், நான்கு பேருமே ஹீரோக்களாக வருகிறார்கள். அருள்நிதிக்கு ரொமான்ஸ் என்றால், பவன் மற்றும் கொலையாகும் நண்பர்களுக்கு ஆக்சன், தனி ஃபைட் என்று ஈகுவலாக வாய்ப்பு கொடுத்தே எடுத்திருக்கிறார்கள். அருள்நிதியும் அண்ணாச்சி தயாரிப்பு தானே என்று அட்வாண்டேஜ் எடுத்துக்கொள்ளாமல், கதைக்கு ஏற்றபடி விட்டுக்கொடுத்து நடித்திருக்கிறார். தருண்குமார் என்பவரின் திருட்டுப் பயமகளே உள்ளிட்ட அனைத்துப் பாடல்களுமே நன்றாக இருந்தது. பின்னணி இசை ஓரளவுக்கு பரவாயில்லை.

 

மொத்தத்தில் தகராறு ....தாறுமாறு ......... 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்