Home  |  அறுசுவை

கோவில் புளியோதரை (Temple Puliyodharai)

தேவையானவை :

 

புளி - பெரிய உருண்டை,

மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப.

 

வறுத்துப் பொடிக்க தேவையானவை :

 

காய்ந்த மிளகாய் - 5,

வெந்தயம் - 1/2 டேபிள் ஸ்பூன்

தனியா - 2 டேபிள் ஸ்பூன்,

கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்,

எள் - 1 டேபிள் ஸ்பூன்,

 

தாளிக்க தேவையானவை :

 

கடுகு - 1 டேபிள் ஸ்பூன்,,

கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்,,

வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 1 பிடி,

பெருங்காயம் - சிறிது,

காய்ந்த மிளகாய் - 7,

கறிவேப்பிலை - சிறிது,

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,

 

சாதம் கலக்க தேவையானவை :

 

சாதம் - 4 கப்,

நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்.

 

செய்முறை :

 

1.ஒரு பாத்திரத்தில் புளியை 2 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டவும்.வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து நைசாக பொடித்து வைக்கவும்.மிளகாயை கிள்ளி வைக்கவும்.

2.வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து, கிள்ளிய மிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து சிவந்ததும், வேர்க்கடலை சேர்த்து பிரட்டி கறிவேப்பிலை சேர்க்கவும்.கரைத்த புளியை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

3.புளி பச்சை வாசனை போய், நன்கு கொதித்து கெட்டியானதும் பொடித்த பொடியில் முக்கால் பாகம் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.சாதத்தை உதிர் உதிராக வடித்து நல்லெண்னெய் கலந்து ஆற வைக்கவும். நன்கு ஆறியபின், புளிக்கரைசல், மீதியுள்ள பொடி சேர்த்து நன்கு சாதம் உடையாமல் கலந்து அமுக்கி வைக்கவும்.  ஒரு மணி நேரம் ஊற விட்டு பின்பு பரிமாறவும்.

Temple Puliyodharai

Ingredients for Temple Puliyodharai:

  

Tamarind- Big Balls

Turmeric Powder-1 Tbsp

Salt-as Needed

  

Fry and Grind:

  

Dry Chilly-5

Fenugreek-1/2 Tbsp

Coriander-2 Tbsp

Bengal Gram-2 Tbsp

Sesame oil-1 Tbsp

  

Ingredients for Tempering:

  

Mustard-1 Tbsp

Bengal Gram-1 Tbsp

Fried Groundnut-1 Pinch,

Asafoetida-Little

Dry Chilly-7

Curry Leaves-Little

Oil-4 Tbsp

 

Ingredients for Mixing in Boiled Rice:

 

Boiled rice-4 Cup

Sesame oil-4 Tsp

 

Procedure to make Temple Puliyodharai:

 

1. In a vessel, mix tamarind along with 2 cup of water and filter it. Fry the given frying ingredients and grind them well. Chop the chilly.

2. Heat oil in a pan, add mustard, asafoetida and let to splutter and then add chilly, bengal gram, groundnut and curry leaves. Add tamarind jice, salt, turmeric powder and let to boil.

3. Fry till the raw smell subsides, add ground powder and allow to boil and then remove from flame. Now add this into boiled rice along with sesame oil. Leave this tamarind rice for 1 hour to soak and serve it.

 

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!