Home  |  திரை உலகம்

வடிவேலு படத்திற்கு எதிராக மனு !!

நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்து வரும் ஜெகஜால புஜபல தெனாலிராமன் அடுத்த மாதம் 11–ந்தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு தற்போதே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.


இந்த படத்தில் கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக தெலுங்கு அமைப்புகள் சந்தேகம் தெரிவித்துள்ளன. 


மேலும் இதுகுறித்து தணிக்கை அதிகாரிகளிடம் அளித்துள்ள மனுவில் தெலுங்கு அமைப்புகள் கூறியிருப்பதாவது, நடிகர் வடிவேலு ஏற்கனவே நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி என்ற படத்தில் மன்னர்களை கோமாளி போல் சித்தரித்தார். தற்போது அவர் நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள ஜெகஜால புஜபல தெனாலிராமன் படத்தில் கிருஷ்ண தேவராயராகவும் தெனாலிராமனாகவும், இரு வேடங்களில் நடித்துள்ளார். 


இந்த படத்தில் கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்துவது போல் காட்சிகள் இருப்பதாக சந்தேகிக்கிறோம். 


கிருஷ்ணதேவராயர் மக்களுக்கு ஏராளமான நன்மைகள் செய்தவர். திருப்பதி கோவிலை அவர் தான் கட்டினார். 


கிருஷ்ண தேவராயரை கொச்சைப்படுத்தும் காட்சிகள் இருந்தால் தெலுங்கு பேசும் மக்கள் வருத்தப்படுவார்கள். எனவே கிருஷ்ண தேவராயர் வரலாறு தெரிந்தவர்களை வைத்து படத்தை பார்க்க வைக்க வேண்டும். சர்ச்சை காட்சிகள் இருந்தால் அவற்றை நீக்க வேண்டும் என தெலுங்கு அமைப்புகள் தானது மனுவில் தெரிவித்துள்ளன. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்