தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த ஆண்டிற்க்கான ஆசிரியர் தகுதி தேர்வை விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. ஏற்கனவே இரண்டுமுறை மட்டுமே நடந்துள்ளது. இந்த தேர்வை நடத்த தமிழகத்தில் ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் ஆகியும் இரண்டுமுறை மட்டுமே நடந்துள்ளதால் இது மீண்டும் வருமா? வராதா? என்ற ஒரு சந்தேகத்தை ஆசிரியர்களின் மனதில் எழுந்துள்ளது.
எனவே இது தொடர்பான வழக்கு ஜூலை மாதம் விசாரணைக்கு வருகிறது என்று அரசு வட்டார தரப்பில் கூறப்படுகிறது. வழக்கை விரைந்து முடிக்க அரசும் முனைத்து வருகிறது. ஆகவே ஆகஸ்ட் மாத இறுதிக்குள் எந்த ஒரு தகவலும் விரைவில் வரும். பின்னர் அடுத்து வரும் மாதங்களில் நடத்தவும் வாய்ப்புள்ளது.
எனவே ஆசிரியர்கள் இன்றிலிருந்தே பாடங்களை படிக்க துவங்குங்கள். வந்தாலும் வராவிட்டாலும் படிப்பது நமது கடமை. ஆனால் ஒன்றுமட்டும் மனதில்கொள்ளுங்கள் இது அதிகாரபூர்வ அறிவிப்பு அல்ல. எதிர்பார்ப்புதான்.
|