Home  |  நாட்டு நடப்பு

டி சி எஸ் கணினி நிறுவனம் - மீது அமெரிக்காவில் வழக்கு !!

டி சி எஸ் கணினி நிறுவனம் - மீது அமெரிக்காவில் வழக்கு !!


இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது.
இதில் அமெரிக்க பணியாளர்களுக்கு எதிராகவும், தெற்காசியர்கள் குறிப்பாக இந்தியர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக கூறி அதன் முன்னாள் ஊழியர் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

 

 


அமெரிக்காவைச் சேர்ந்த அந்த முன்னால் ஊழியர் ஸ்டீவன் ஹெல்ட் டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆவார். இவர் சான் பிரான்ஸிஸ்கோ தலைமை நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அமெரிக்காவில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 14,000 பேர் பணிபுரிகின்றனர். இதில் 95 சதவீதம்பேர் தெற்காசியர்கள் அதிலும் குறிப்பாக பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள்.

 

 

அந்நிறுவனம் வேலைக்கு ஆள் எடுத்தல் மற்றும் பதவி உயர்வு போன்றவற்றில் அமெரிக்க ஊழியர்களிடையே பாரபட்சம் காட்டுகிறது எனவும் ஏராளமான ஹெச்-1பி விசா பணியாளர்களையும், தெற்காசியர்களையும் பணியமர்த்துவதன் மூலம் பாரபட்சம் காட்டுகிறது எனவும்

 

 


அங்கு தெற்காசியர்கள் அல்லாத சிலரும் பணிபுரிகின்றனர். வேலைக்கு ஆள் எடுத்தல் மற்றும் பதவி உயர்வு, வேலை நீக்கம் ஆகியவற்றில் தெற்காசியர்கள் அல்லாதவர்களுக்கு பாரபட்சமாக செயல்படுகிறதுஎனவும் கடந்த 2011 முதல் 2013 வரை சுமார் 21,000 ஹெச்-1பி விசாக்களை அளித்துள்ளது. இவர்கள் அனைவருமே தொடக்க நிலை இந்தியப் பணியாளர்கள்.

 

 

அங்கு பணிபுரிந்த 20 மாதங்களும் மிக மோசமான அனுபவமே கிடைத்தது. ஒரு வீட்டு உதவியாள் அளவுக்கான பொறுப்புகளே எனக்கு அளிக்கப்பட்டன. அமெரிக்கர்களுக்கு எதிரான மனப்பான்மை உணர்வை நான் அங்கு அனுபவித்தேன்.

 


டாடா நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பிலுள்ள மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளுள் ஒருவர், வேலைக்கு ஆள் எடுப்பவர்களிடம் இந்தியர்கள் மீது கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளார். அவருக்கு அமெரிக்கர்களைப் பிடிப்பதில்லை.

 

அமெரிக்கர்களை விட இந்தியர்கள் புத்திக்கூர்மை மிக்கவர்கள் எனவும் மிகச்சிறந்த தகுதியுடையவர்கள் எனக் கருதுகிறார் எனவும் அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

 

 

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?