Home  |  நாட்டு நடப்பு

தமிழக பெண் - அமெரிக்க நீதிபதி !!

தமிழக பெண் - அமெரிக்க நீதிபதி !!

 


இந்தியர் அதுவும் தமிழர் அமெரிக்க நீதிபதியாக இருப்பது பெருமை படவைக்கும் செய்தியாக உள்ளது .
அமெரிக்காவின் நியூயார்க் நகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

நமது தமிழகத்தில் சென்னை நகரில் பிறந்த இவர் தனது 16 வயதில் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார்.
இந்திய பெண் ஒருவர் அமெரிக்காவின் நியூயார்க் நகர நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை.

 

ரிச்மோண்ட் கவுண்டி மாவட்டத்தில் ராஜ ராஜேஸ்வரி இதற்கு முன்பு அரசுத் தரப்பு வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணி புரிந்தார். அவரை நியூயார்க் நகர் மேயர் பில் டி பால்சியோ, நியூயார்க் நகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமித்துள்ளார்.

 

இது பபற்றி ராஜராஜேஸ்வரி கூறியது - எனக்கு இப்பதவி அளிக்கப்பட்டுள்ளதை கனவு போன்று உணர்கிறேன். இது நான் கற்பனை செய்ததற்கும் மேலானது. எனெனில் நான் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பெண். எனக்கு இங்கு உயரிய பதவி கிடைத்துள்ளது. எனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு நீதித்துறையின் மேம்பாட்டுக்கு உதவுவேன் என அவர் கூறினார்.

 

இப்போது இந்திய வம்சவாளியைச் சேர்ந்த இரு ஆண்கள் அமெரிக்காவில் நீதிபதிகளாக உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய கலாசார நிகழ்வுகள் மற்றும் கோயில் விழாக்களில் பங்கேற்றுள்ள ராஜ ராஜேஸ்வரி தனது குழுவினருடன் பரத நாட்டியம் மற்றம் குச்சிப்புடி நடனங்களை அரங்கேற்றம் செய்துள்ளார். அவரது தாய் பத்மா ராமநாதனின் பெயரில் பத்மாலயா நாட்டிய அகாடமியை நடத்தி வருகிறார்.

நமது இந்திய பெண்களின் வளர்ச்சி உலக அளவில் உயர்ந்திருப்பது நலமே - பாரதி கண்ட புதுமை பெண் இவர் தான் என தோன்றுகிறது .

 

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?