Home  |  திரை உலகம்

பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டாம் பாகத்தில் தமன்னா!!

தமன்னா தற்போது  பாஸ் (எ) பாஸ்கரன் இரண்டாம் பாகத்தில் ஆர்யாவுடன் இணையவுள்ளார். இது பற்றி அவரிடம் கேட்டபோது, இப்படத்தில் நடிப்பது எனக்கு சந்தோசமாக இருக்கிறது, அந்த நாட்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என உற்ச்சாகமாக கூறினார். ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி என பல வெற்றி படங்களை கொடுத்த ராஜேஷ் இப்படத்தை இயக்குகிறார்.

 

ஆர்யா,தமன்னா இருவரும் ஜோடி சேர்வது இதுவே முதல் முறை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வீரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். ஆனால், அப்படம் தமன்னாவுக்கு நல்ல வெற்றியை தரவில்லை.

 

எனவே, பாஸ் (எ) பாஸ்கரன்-2 படத்தின் மூலம் தமன்னா, தமிழ் திரையுலகில் ஆதிக்கம் செலுத்த ஆர்வம் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பாஸ் (எ) பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் தமன்னா
சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் கதாநாயகியாக இருந்தார் தமன்னா. யார் கண் பட்டதோ தெரியவில்லை...அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்துவந்தநிலையில் திடீரென காணாமல் போனார். பிறகு தெலுங்கில் பிஸியான தமன்னா, சில வருட இடைவெளிக்குப் பிறகு அஜித் ஜோடியாக வீரம் படத்தில் நடித்தார். அப்படம் வணிகரீதியில் பெரிய வெற்றியைப்பெற்றும் தமன்னாவுக்கு பெரிதாக நன்மைவிளையவில்லை.
இந்நிலையில், தற்போது, தமிழ்ப்பட இயக்குநர்களின் பார்வை தமன்னாவை நோக்கி திரும்பி உள்ளது. கூடவே ஹீரோக்களின் பார்வையும்..! சிவா மனசுல சக்தி, பாஸ் (எ) பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகி வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் ராஜேஷ். எம், கார்த்தியை வைத்து இயக்கிய அழகுராஜா படத்தின் படு தோல்வி காரணமாக கவிழ்ந்துபோனார். அவருக்கு லைஃப் கொடுக்கும் எண்ணத்தில் தன்னுடைய சொந்தப் படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் பாஸ் (எ) பாஸ்கரன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளார் ஆர்யா.
இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக, நயன்தாரா நடிக்க உள்ளார் என முதலில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், தற்போது கிடைத்த செய்தியின்படி.. இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளார். இருவரும் ஜோடி சேருவது இதுவே முதல் முறை.
இது பற்றி தமன்னாவிடம் கேட்டபோது, "பாஸ் (எ) பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போவதை நினைத்தாலே உற்சாகமாக இருக்கிறது. அந்த கலகலப்பான நாட்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இனி, கொஞ்சகாலத்துக்கு ஆர்யா உடன் நட்சத்திர ஹோட்டல்களில் அடிக்கடி தமன்னாவைப் பார்க்கலாம்!

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்