Home  |  திரை உலகம்

வீடியோ ஆல்பமாக தயாராகிறது உழவன் தாத்தா பாடல் !!

கடந்த பொங்கல் அன்று திரைப்பட பின்னணி இசை அமைப்பாளர் தாஜ்நூர், சமீபத்தில் மறைந்த இயற்கை வேளாண் விஞ்சானி நம்மாழ்வார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் உழவன் தாத்தா என்ற இசை தொகுப்பை வெளியிட்டார். இந்த இசை தொகுப்பை, சேலத்தை சேர்ந்த ஈசன் என்ற அமைப்பு விவசாயிகளிடம் பரப்பி வருகிறது. இந்த முயற்சிக்கு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து இசை ஆல்பத்தை வீடியோ ஆல்பமாக தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் தாஜ்நூர். 

 

இது குறித்து திரைப்பட பின்னணி இசை அமைப்பாளர் தாஜ்நூர் கூறியதாவது, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நமக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம். ரசாயண உரங்கள் மண்ணை சாகடிப்பதை எதிர்த்து போராடினார். வெறும் பேச்சோடு நின்று விடமால் இயற்கை விவசாயத்தை லாபமான முறையாக மாற்றிக் காட்டினார். அவரது மரணம் இயற்கை விவசாயிகளுக்கு பெரும் இழப்பு. அவரை பற்றி ஒரு பாடல் இசைத்து தருமாறு சேலம் ஈசன் அமைப்பினர் என்னை தொடர்பு கொண்டனர். பொங்கல் திருநாளில் அதை கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஈசன் அமைப்பைச் சேர்ந்த இளங்கோவன் டாக்டர் சசி இணைந்து எழுதிய "உழவன் தாத்தா வந்திருக்கேன்" பாடலுக்கு மெட்டுப்போட்டு ஒரு நாள் இரவில் வேல்முருகனை பாட வைத்தேன். சேலம் பகுதியில் இந்த பாடல் பொங்கல் அன்று ஒலிபரப்பானது. நான் சினிமாவில் சம்பாதிக்காத புகழை இந்த ஒரு பாடலில் சம்பாதித்தேன். இப்போது மேலும் மூன்ற பாடல்களை சேர்த்து அதனை வீடியோ ஆல்பமாக தயாரிக்க இருக்கிறேன். இதற்காக நம்மாழ்வார் போன்ற தோற்றம் கொண்ட ஒருவரை தேடிக் கொண்டிருக்கிறேன் என மகிழ்ச்சியோடு சொல்லுகிறார் தாஜ்நூர்...

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்