Home  |  திரை உலகம்

நடிகர் சூர்யா 'சிங்கம்-2' படத்துக்காக ''ஹன்சிகாவை தூக்கிக் கொண்டு ஓடிய அனுபவம்!

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடித்த 'சிங்கம் 2' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சூர்யா இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
சிங்கம்' படத்தில் நடித்தபோது, சுதந்திரமான ஓட்டம் ஓடினோம். 'சிங்கம்&2' எடுத்தபோது, மொத்த படக்குழுவே ஓடினோம். 'சிங்கம்&1'தான் எங்களுக்கு போட்டியாக இருந்தது. எல்லோருமே சேர்ந்து குடும்பமாக உழைத்தோம். முதல் படத்தில் உள்ளவர்கள் பலரும் 'சிங்கம்&2'வில் இருக்கிறார்கள். படத்துக்கு சந்தானம் கூடுதல் நம்பிக்கையாக சேர்ந்திருக்கிறார் அது, மேலும் கலகலப்பு சேர்க்கும். அதேபோல் ஹன்சிகாவும் இந்த படத்தில் சேர்ந்திருக்கிறார். அவருடன் இணைந்து முன்பே ஒரு படத்தில் நடித்திருக்க வேண்டியது. அப்போது முடியவில்லை. அவருடன் நான் நடித்த முதல் காட்சியே எடுத்தவுடன் அவரை தூக்கிக்கொண்டு ஓட வேண்டும். எனக்கும், அவருக்கும் அறிமுகம் இல்லை. ஒரு ஹலோ சொல்லக் கூட வாய்ப்பில்லை. பேசக்கூட அவகாசம் இல்லை. தூக்கிக்கொண்டு ஓடினேன். ஹன்சிகா எந்த காட்சியையும் ஜாலியாக, சுலபமாக நடித்துவிட்டு போனார். ஒரே 'டேக்'கில் நடித்து ஆச்சரியப்படுத்தினார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்