Home  |  திரை உலகம்

வெங்கட் பிரபுவுடன் கூட்டணி சேறும் சூர்யா !!

நடிகர் சூர்யா இயக்குனர் லிங்குசாமியின் படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் முழுக்க முழுக்க வெங்கட் பிரபு பாணியில் அதாவது ஆக்ஷன் + ரொமான்ஸ் + காமெடி கலந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தல அஜீத்தை வைத்து மங்காத்தா முடிந்த கையேடு, சூர்யாவை வைத்து படம் இயக்க வாய்ப்பு கேட்டிருந்தார் வெங்கட் பிரபு. ஆனால் சூர்யா அப்போது மாற்றான், சிங்கம் 2 என படு பிஸியாக இருந்ததால், அந்த இடைவெளியில் கார்த்தியை வைத்து 'பிரியாணி'யை தயார் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்கள் ஸ்டுடியோ கிரீன்காரர்கள். இப்போது சூர்யா லிங்குசாமி படத்தில் நடிக்கிறார். இடையில் அவர் நடிக்கவிருந்த கவுதம் மேனன் படம் ட்ராப்பாகிவிட, இப்போது அந்த கால்ஷீட்டை வெங்கட்பிரபுவுக்கு கொடுத்திருக்கிறார் சூர்யா.

 

வெங்கட் பிரபு சொன்ன ஒரு வரிக் கதையில் ரொம்பவே இம்ப்ரஸ் ஆகிவிட்ட சூர்யா, இந்தப் படத்தை நாம் கண்டிப்பாக செய்வோம். ஏப்ரலில் ஆரம்பித்துவிடலாம் என கூறியுள்ளாராம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது நடிகர் சூர்யா ஆரம்பித்துள்ள புதிய பட நிறுவனமான டி 2 எண்டர்டெயின்மென்ட்!

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்