Home  |  திரை உலகம்

தீயணைப்பு துறையின் விழிப்புணர்வு குறும்படத்தில் பொது மக்களுக்கு அட்வைஸ் செய்ய வருகிறார் சூர்யா !!

தீபாவளி சமயங்களில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், தீயணைப்பு துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு படம் ஒன்றில், நடிகர் சூர்யா நடித்துள்ளார். 


தீபாவளி பண்டிகையின்போது ஏற்படும் பட்டாசு விபத்துகளை தடுக்க தீயணைப்பு துறையினர் கடந்த ஒரு வார காலமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி வருவதுடன் விழிப்புணர்வு ஒத்திகையும் நடத்தி காண்பித்து வருகின்றனர். மேலும் பள்ளி கல்லூரிகளுக்கும், விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது. இதற்கிடையே நடிகர் சூர்யாவை வைத்து விழிப்புணர்வை படத்தை தீயணைப்பு துறையினர் தயாரித்துள்ளார்கள். 2 நிமிடம் ஓடும் இந்த படத்தில் சூர்யா பொது மக்களுக்கு அறிவுரை வழங்குகிறாராம். படத்திற்கு பின்னணி இசை சேர்க்கும் வேலை தற்போது நடந்து வருகிறதாம். அந்த வேலை முடிந்ததும் படத்தை பத்திரிக்கையாளர்களுக்கு போட்டு காட்டிவிட்டு திரையரங்குகளில் வெளியிடவும், தொலைகாட்சிகளில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக தீயணைப்புத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.. இந்த படத்தில் சூர்யா தானாக முன்வந்து நடித்ததுடன் அதற்காக சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்