Home  |  திரை உலகம்

உலக திரைப்படங்களிலே முதல் முறையாக...

உலகிலேயே முதல் முறையாக, லிங்கு சாமி இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படத்திற்கு ரெட் ட்ராகன் டிஜிட்டல் கேமரா பயன்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

 

லிங்குசாமி இயக்கத்தில், சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கான, படப்பிடிப்பு கடந்த 15 ம் தேதி சென்னையில் துவங்கியது. சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இந்தப் படத்திற்காக டெஸ்ட் ஷூட் நடைபெற்றுள்ளது. இந்தப் படத்திற்காக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், ஹாலிவுட்டில் கூட இதுவரை பயன்படுத்தாத ரெட் ட்ராகன் டிஜிட்டல் கேமராவுடன், ஆன்ஜினியக்ஸ் லென்ஸ் வைத்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சந்தோஸ் சிவனுக்கு பிறகு, ஹாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளர்களான ரிட்லி, ஸ்காட் உள்ளிட்டவர்கள் இந்த புதிய கேமராவை பயன்படுத்த இருக்கிறார்கள். இந்தப் புதிய முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது என ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தெரிவித்துள்ளார். 

 

மேலும், சந்தோஸ் சிவன் ஒளிபதிவு குறித்து, நடிகர் சூர்யா கூறியதாவது, லிங்குசாமி இயக்கத்திலும், சந்தோஸ் சிவன் ஒளிபதிவிலும் நடிப்பது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. நான் சின்ன வயதில் 'தளபதி' படத்தில் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவைப் பார்த்து வியந்திருக்கிறேன். தற்போது அவர் என்னுடைய படத்திற்கு உலக அளவில் இதுவரை யாருமே உபயோகிக்காத கேமரா மூலம் ஒளிப்பதிவு செய்வது சந்தோஷமாக இருக்கிறது என நடிகர் சூர்யா கூறியுள்ளார். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்