Home  |  நாட்டு நடப்பு

வாழ்த்துக்கள் வாழ்த்துங்கள் நம்மில் ஒருவன் நமக்காக ஒருவன் !!

வாழ்த்துக்கள் வாழ்த்துங்கள் நம்மில் ஒருவன் நமக்காக ஒருவன் !!

கூகுள் நிறுவனத்தின் புதிய பிரதம தலைமை நிறைவேற்று அதிகாரியாக (CEO) இந்திய தமிழர் சுந்தர் பிச்சை (Sundar Pichai) நியமிக்கப்பட்டுள்ளார். 43 வயதான சுந்தர் பிச்சை சென்னையைச் சேர்ந்தவர்.

சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் படித்த இவர் பின்னர் ஐ.ஐ.டி. கரக்பூரில் பொறியியல் பட்டமும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் உள்ள வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர். கூகுள் நிறுவனத்தில் சேரும் முன் மெக்கென்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இவர் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பொக்ஸ் ஆகிய பிரவுசர்களில் கூகுள் தேடுதளத்தை எளிமையாக்க உதவும் டூல்பார் உருவாக்கும் ஒரு சிறிய அணியில் தான் பிச்சைக்கு பணி கிடைத்தது. ஆனால், நாம் ஏன் மற்ற பிரவுசர்கள் பின்னால் அலைய வேண்டும் நாமே ஒரு பிரவுசரை உருவாக்கலாமே என தனது அதிகாரிகளிடம் பிச்சை தெரிவித்தார்.

முதலில் இது தேவையில்லாத வேலை என கூகுள் நினைத்தது. ஆனால் அதன் பலன்களை எடுத்துச் சொல்லி பிரவுசரை உருவாக்கும் திட்டத்துக்கு வலு சேர்த்தார். அடுத்த ஓராண்டில் அதாவது 2008 ஆம் ஆண்டு பிச்சை தலைமையிலான குழு கூகுள் குரோமை வெளியிட்டது இப்போது உலகில் 32 சதவீதம் பயன்படுத்தப்படும் பிரவுசர் குரோம் தான்.

அதனைத் தொடர்ந்து தலைமை துணைத்தலைவர் பதவியில் இருக்கும் போது இவர் ஆண்ட்ராய்ட், கூகுள் என்ஜினியரிங், ஆப்ஸ், ஜிமெயில், கூகுள் டோக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளைக் கவனித்து வந்தவர். இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியாக சுந்தர் பிச்சை அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த அதன் நிறுவனர் லாரி பேஜ் கவனித்து வந்த கூகுளின் சர்ச், கூகுள் பிளஸ், வர்த்தகம், விளம்பரம், கூகுள் மேப்ஸ், யூடியூப், ஆப்ஸ் மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளை இனி சுந்தர் பிச்சை நிர்வகிப்பார். இதில் கூகுள் சர்ச் மற்றும் கூகுள் விளம்பரம் ஆகியவை தான் கூகுளின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் கூகுளின் எதிர்கால அதி உயர் தொழில்நுட்பப் பிரிவுகளான காலிகோ, எக்ஸ் லேப்ஸ், உயிரியல் தொழில்நுட்பம் ஆகியவை கூகுளில் இருந்து பிரிக்கப்பட்டு ஆல்பபெட் என்ற பெயரில் தனி நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவை இனி லாரி பேஜ் கவனிப்பார். கூகுளின் முதலீட்டு நிறுவனமும் லாரி பேஜ் வசம் இருக்கும். அதே நேரத்தில் நிர்வாக ரீதியில் ஆல்பபெட் நிறுவனத்தின் கீழ் கூகுள் இயங்கும்.

பிச்சை சுந்தரத்தின் இந்த நியமனம் மூலம் உலகின் சிறந்த இரண்டு நிறுவனங்களான மைக்ரோசொப்ட், கூகுள் ஆகியவற்றின் தலைமை பிரதம நிறைவேற்று அதிகாரிகளாக இரண்டு இந்தியர்கள் பொறுப்பில் உள்ளனர் என்பது பெருமைக்குரிய விடயமாகும். ஒருவர் சுந்தர் பிச்சை மற்றையவர் மைக்ரோசொப்ட் தலைமை செயல்பாட்டு அதிகாரியான ஆந்திராவைச் சேர்ந்த சத்யா நடெல்லா என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை (GEC) நிறுவனத்தில் எலெக்ட்ரிகல் என்ஜினியராக பணியாற்றியவர். தாயார் ஸ்டெனோகிராபராக இருந்தவர். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பிச்சை தனது புத்திசாலித்தனத்தாலும் கடும் உழைப்பாலும் இந்த நிலையை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி அஞ்சலி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

வாழ்த்துக்கள் வாழ்த்துங்கள் நம்மில் ஒருவன் நமக்காக ஒருவன் !!

  12 Aug 2015
User Comments
01 Mar 2016 06:04:36 BHARATHI said :
GOOD WISHES TO TWO INDIANS
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?