Home  |  திரை உலகம்

சும்மா நச்சுனு இருக்கு (Summa Nachunu Irukku)

சும்மா நச்சுனு இருக்கு (Summa Nachunu Irukku)

Movie Name: Summa Nachunu Irukku சும்மா நச்சுனு இருக்கு
Hero: Thaman Kumar
Heroine: Vibha Natarajan
Year: 2013
Movie Director: A. Venkatesh
Movie Producer: Esthell Entertainers
Music By: Achu

ஆட்டோ ஓட்டுனர்களான தமன், தம்பி ராமையா, மகேஷ் மூன்று பேருக்கும் குறுக்கு வழியில் பணம் சேர்க்க ஆசை. ஒருமுறை ரவுடிக் கூட்டத்திடமிருந்து தப்பும் விபாவை தமன் காப்பாற்ற, ரவுடிகள் தாக்கியதில் விபா கோமாஸ்டேஜை அடைகிறார். பிறகுதான் அவர் மலேசிய கோடீஸ்வரரான வெங்கடேஷ் மகள் என்று தெரிய வருகிறது. சென்னைக்கு படிக்க வந்த இடத்தில் விபா, ஆட்டோ டிரைவரை காதலிப்பதாகவும், அவரை மணந்து கொள்ள தான் மறுத்ததால் ஓடிவந்துவிட்டதாகவும் கூறும் வெங்கடேஷ், அந்த ஆட்டோ டிரைவர் தமன்தான் என்று முடிவு செய்கிறார். மகள் காதலை ஏற்பதாகக் கூறி தமனை மலேசியா அழைக்கிறார்.

தமன், விபாவின் காதலனாகவும், தம்பி ராமையா அவரது சித்தப்பாவாகவும், மகேஷ் நண்பனாகவும் மலேசியா செல்கிறார்கள். அங்கு வெங்கடேஷின் சொத்துக்களை அபகரிக்க நாள் பார்க்கிறார்கள். டத்தோவின் தம்பியாக பவர் சிங் (சீனிவாசன்) வருகிறார். இந்த குழப்பங்களை எப்படி தீர்த்து வைத்து சுபம் போடுகிறார்கள். தமன் இன்னொரு சாக்லெட் பாய். ஆனாலும் தம்பி ராமையா, சீனிவாசன், அப்புக்குட்டி மூவருக்கும் நடுவில் தன்னையும் காமெடியில் நிலைநிறுத்திக் கொள்கிறார். விபா ஆரம்ப காட்சியிலேயே கோமாவுக்கு சென்று விடுவதால் அவருக்கான காட்சிகள் குறைவு. இறுதியில் அவர்தான் ட்விஸ்ட்டுகளை அவிழ்க்கிறார். இன்னொரு நாயகி அர்ச்சனா,

தமனின் ரகசியத்தை தெரிந்து கொள்ள தம்பி ராமையாவை கரெக்ட் பண்ணுவதும், அதற்காக பிளான் போடுவதுமாக காமெடி கோஷ்டியில் சேர்ந்துவிடுகிறார். சதா சந்தேகத்தோடே திரிகிறார் அப்புக்குட்டி. சந்தானம் ஸ்டைல் டைமிங் டயலாக்கில் சிரிக்க வைக்கிறார் மகேஷ். மலேசியாவின் அழகை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறது சி.ஜே.ராஜ்குமாரின் ஒளிப்பதிவு. அச்சுவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை.

  17 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
எனக்கு செட் ஆகாத ஹீரோயின் இவர்தான்...! விஜய் சொன்னது
வனமகன்– திரைவிமர்சனம்
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் – திரைவிமர்சனம்
ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து அப்படி ஒரு வார்த்தை வருது கஷ்டம்- விஜய்யை புகழ்ந்த அட்லீ
மெர்சல் பர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் தரப்பிலிருந்து வந்த பாராட்டு
இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை
வருங்கால முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்