Home  |  அறுசுவை

சளி, இருமலுக்கு இதமான சுக்கு, மல்லி காபி !!

சளி, இருமலுக்கு இதமான சுக்கு, மல்லி காபி !!

அந்த காலத்தில் எல்லாம் சளி, இருமல் போன்றவற்றிற்கு கை வைத்தியம் போன்று சுக்கு மல்லி காபி போட்டு குடிப்பார்கள். அப்படி குடித்தால், உடனே சளி மற்றும் இருமல் உடனே நின்றுவிடும். உங்களுக்கு சுக்கு மல்லி காபி எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு சுக்கு மல்லி காபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

சுக்கு காபி பொடி அரைக்க :

சுக்கு - 1/2 கப்

மல்லி - 1/4 கப்

மிளகு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

சுக்கு காபி செய்ய :

தண்ணீர் - 2 கப்

சுக்கு காபி பொடி - 2 டீஸ்பூன்

பனங்கற்கண்டு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சுக்கு மல்லி பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 2 டீஸ்பூன் சுக்கு பொடியை சேர்த்து, பின் அதில் பனங்கற்கண்டு சேர்த்து 3-5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். அதில் உள்ள கற்கண்டு கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டினால், சுக்கு மல்லி காபி ரெடி!!!

  16 Dec 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!