Home  |  கல்விச்சோலை

மாணவர் வழிகாட்டி - என்ன படிக்கலாம் !!

மாணவர் வழிகாட்டி - என்ன படிக்கலாம் !!


மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு முடித்து வெளியே வரும் இளம் படிப்பாளிகள் கவனித்திற்கு - நீங்கள் இப்போது தேர்வு செய்ய போகும் வழி உங்கள் வாழ்கை முழுதும் உங்களுடன் வரும் .
என்ன படிக்கலாம் அல்லது வேலைக்கு போலாமா என யோசிப்பில் உள்ள கண்மணிகளுக்கு இதோ சில டிப்ஸ் .

 

உங்கள் விருப்பம் மற்றும் தேவையைப் பொருத்து நல்ல கல்லூரியில் சிறப்பான படிப்பை தேர்வு செய்து கடின முயற்சி செய்து படியுங்கள். நீங்கள் தேர்வு செய்யும் படிப்பின் மீதான உங்களின் ஆர்வம் மற்றும் திறமை, உங்களின் பெற்றோரின் நிதிநிலை மற்றும் உங்களின் லட்சிய பாதை ஆகியவற்றை எப்போதும் கவனத்தில் கொண்டு படிப்பை தேர்வு செய்யுங்கள்.

 

அறிவியல், வணிகம் மற்றும் கலைப்பிரிவு படித்தவர்கள் -

வணிகம், கலை மற்றும் அறிவியல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தால் உங்களுக்கு விருப்பமான படிப்பில் விரைவாக சேருங்கள் . தற்போது கலைத்துறை மற்றும் அறிவியல் துரையின் பங்கு அதிகரித்துள்ளது, எனவே வேலை வாய்ப்புகள் சீராக கிடைக்கும்.

இங்கு தரப்பட்டுள்ள துறைகள் நல்ல வேலை வாய்புகளை தேடித்தரும் .


BA (English) 3 Years

BCA (computer) 3 Years

BBA (Administration) 3 Years

BCom 3 Years

BCom with CA 3 Years

BSc (Computer Science) 3 Years

BSc (Biotechnology) 3 Years

BSc (Hotel Management & Catering Science) 3 Years

BSc (Mathematics) 3 Years

BSc (Textile & Fashion Designing) 3 Years

 

பனிரெண்டாம் வகுப்பு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான படிப்புகள் -

MBBS - BSc அறிவியல் துறை மாணவர்கள் தேர்ந்தெடுக்க நல்ல நல்ல படிப்பு உள்ளது -
மருத்துவ அறிவியல் பிரிவு, எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிவிஎஸ், பி.பார்ம்,
பிபிடி, பிஎச்எம்எஸ், நர்சிங், பிஎஸ்சி ஆப்டோமெட்ரி, பிஎஸ்சி இமேஜிங் டெக்னாலஜி,
பிஎஸ்சி துணைநிலை மருத்துவ அறிவியல்கள்.


இவை தவிர கணிதம், இயற்பியல், வேதியியல், பயோகெமிஸ்ட்ரி,
பயோமெடிக்கல், தாவரவியல், கணினிகள், உணவு தொழில் நுட்பம்,
மண்ணியல், ஹோம்சயின்ஸ், மைக்ரோபயாலஜி, பாலிமர் சயின்ஸ்,
புள்ளியியல், நியூட்ரிஷன், சுற்றுச்சூழல் படிப்புகள்,
கால்நடை பராமரிப்பை உள்ளடக்கிய வேளாண் படிப்பு,
கால்நடை அறிவியல், பால்பண்ணைத் தொழில் மற்றும் கோழி வளர்ப்பு
ஆகியவற்றில் பி.எஸ்.சி படிப்பு மேற்கொள்ளலாம் இவற்றை படித்தால் நல்ல வேலை வாய்ப்பும் வெளிநாட்டு வேலை வாய்ப்பும் கிடைக்க நிறைய சான்ஸ் உள்ளது .


BE BSc பொறியியல் துறை வாய்ப்புகள்:


கணிப்பொறி அறிவியல், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ்,
மெக்கனிக்கல், சிவில், வேளாண் இன்ஜினியரிங், பயோ மெடிக்கல்,
கெமிக்கல், மரைன் இன்ஜினியரிங், மெட்டலார்ஜிக்கல், மைனிங்,

 

 


பெட்ரோலியம் இன்ஜினியரிங், பிளாஸ்டிக் தொழில்நுட்பம், பாலிமர் இன்ஜினியரிங்,
பேஷன் தொழில்நுட்பம், ஸ்பேஸ் தொழில் நுட்பம், டெக்ஸ்டைல் தொழில்துறை
போன்றவை படிக்கலாம் . இதில் தகுதி வாய்ந்த நல்ல கல்லூரியில் சேர்ந்து படிக்கவும் போலி கல்லூரிகள் அதாவது அங்கீகாரம் பெறாதவற்றை நிராகரிக்கவும்.

 இந்நும் சட்ட படிப்பு , டிப்ளோமா படிப்பு என நிறைய படிப்புகள் உள்ளன நல்ல கோர்ஸ் செலக்ட் செய்யவும். 

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!