Home  |  தொழில் நுட்பம்

கண் விழி அசைவில் இயங்கும் கார் !!

கண் விழி அசைவில் இயங்கும் கார் !!

 

பிரபல கார் நிறுவனமான செவ்ரோலெட் நிறுவனம் தனது சமீபத்திய புது கண்டுபிடிப்பான செவ்ரோலெட்-FNR என அழைக்கப்படும் எதிர்காலத்தின் சுய ஓட்டுநர் மிக அழகான  மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 

 

பல சுவாரஸ்யமான அம்சங்களுக்கு மத்தியில் எதிர்காலத்தின் இந்த கார் மாத்திரை போல் வடிவமைப்பு கொண்டுள்ளது. தற்போது இந்த காரை பற்றிய அறிவிப்பு மட்டுமே வந்துள்ளது, வரவிருக்கும் சுய ஓட்டுநர் காரின் தோற்றம் மற்றும் சில உற்பத்தியாளர்களை பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் செவ்ரோலெட்-FNR காரை ஷாங்காயில் இந்த வாரம் காலா நைட் நிகழ்வில் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 

 

 

இது GM ன் பான் ஏசியா தொழில்நுட்ப தானியங்கி மையத்தின் (PATAC) கூட்டு முயற்சியின் மூலம் ஷாங்காயில் உருவாக்கப்பட்டது. செவ்ரோலெட் காரை பார்ப்பதற்கு எதிர்காலத்தின் மொபைலிட்டி வடிவில் வழங்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

 

 

 

இளைய நுகர்வோருக்கு புதுமையான கார் நெட்வொர்க்கிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனிப்பட்ட, நுண்ணறிவு வாகனத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கார் உருவாக்கப்படுகிறது என GM செய்தி கூறியுள்ளது. இதில் கிரிஸ்டல் லேசர் ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்கள் கொண்டுள்ளது, மற்றும் மேல்நோக்கி திறக்கும் 'டிராகோன்ஃப்லை' டூயல் ஸ்விங் கதவுகள் கொண்டுள்ளது.

 

 

 

காரில் மேக்னடிக் ஹப்லஸ் எலெக்ட்ரிக் வீல் மோட்டார்கள் மற்றும் ஒரு வயர்லெஸ் ஆட்டோசார்ஜிங் அமைப்பு உள்ளது. சுய ஓட்டுநர் முறையில் சென்சார்கள் மற்றும் ரூஃப் பொருத்திய ரேடார் பயன்படுத்தி சுற்றுப்புறப் பகுதிகளை கண்டறிய மேப் பயன்படுத்தப்படுகின்றது. மேலும், ஐரீஸ் ரெகக்னைசேஷன் பயன்படுத்தப்பட்டிருப்பதால் உங்கள் கண்களின் கருவிழிகளால் பார்த்துக்கூட காரை திருப்ப முடியும். சுய ஓட்டுநர் முறையில் கார் சென்று கொண்டிருக்கும் போதே ஓட்டுநர், முன் இருக்கையை 180 டிகிரி கோணத்தில் திருப்பி பின் இருக்கைகளில் இருக்கும் பயனிகளை பார்த்து பேச முடியும்.

 

 

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!