Home  |  திரை உலகம்

பிரமாண்டத்திலும், காட்சியமைப்பிலும் ஷங்கரை யாரும் நெருங்க முடியாது : நான் ஈ பட இயக்குனர் !!

நேற்று முன் தினம் வெளியான ஐ படத்தின் பாடல்களும், டீசரும் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது, இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. 


ஒரு நிமிடத்திற்கு குறைவாக டீசர் ஓடினாலும், அதில், உள்ள பிரம்மாண்டத்தையும், விஷூவல் எஃபெக்ட்ஸ், மேக்கப் இன்னும் பிற விஷயங்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.


இதுவரை வந்த ஷங்கர் படங்களை விட இந்தப் படத்தின் பிரம்மாண்டமும், தொழில்நுட்ப விஷயங்களும் நமது தமிழ் சினிமாவின் தரத்தை பன்மடங்கு உயர்த்தியிருப்பதாக எண்ணற்ற ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். 


அதே சமயம் இந்திய திரையுலகத்தைச் சேர்ந்த பல இயக்குனர்களும் டீஸரைப் பற்றிப் பாராட்டி வருகிறார்கள். 


அவர்களில் முக்கியமாக குறிப்பிட வேண்டியவர் தென்னிந்தியாவில் ஷங்கருக்கு அடுத்து பிரம்மாண்டத்தில் அசத்தும் 'நான் ஈ' படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தான். 


'நான் ஈ' படத்தில் அவருடைய கிராபிக்ஸ், பிரம்மாண்டம் தமிழ் ரசிகர்களையும் அவருக்குப் பெற்றுத் தந்தது. 


தற்போது அனுஷ்கா நடிப்பில் உருவாக்கி வரும் 'பாகுபலி' என்ற பிரம்மாண்ட சரித்திரப் படத்தை இயக்கி வருகிறார். 


'ஐ' டீசரைப் பார்த்து விட்டு அவர் கூறியிருப்பதாவது, “ஷங்கர் ஸாரின்......ஐ டீசர்...பிரமிக்க வைக்கிறது, அவரின் பிரம்மாண்டத்திற்கும், காட்சியமைப்பிற்கும், ஒருவரும் பக்கத்தில் கூட நெருங்க முடியாது,” என மனம் திறந்து பாராட்டியுள்ளாராம் ராஜமௌலி.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்