Home  |  ஆன்மிகம்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் பிரமோற்சவம்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் பிரமோற்சவம்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் பிரமோற்சவம் கடந்த 12ம் தேதி தொடங்கியது.
முக்கிய நிகழ்ச்சியான மகாசிவராத்திரி கடந்த 17ம் தேதியும்,

மகா தேரோட்டம் 18ம் தேதியும் நடைபெற்றது.

 

 

நேற்று முன்தினம் இரவு காளஹஸ்தீஸ்வரர் யானை வாகனத்திலும், ஞான பூங்கோதை தாயார் சிம்ம வாகனத்திலும் மணமக்கள் அலங்காரத்தில் 4 மாட வீதி வழியாக ஊர்வலமாக திருக்கல்யாண மண்டபத்திற்கு வந்தனர். பின்னர், நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

 


விழாவின் தொடர்ச்சியாக நேற்று காலை சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 4.30 மணியளவில் சுவாமி திருக்கல்யாணம், பிரதான அர்ச்சகர் சாம்பசிவ சாஸ்திரி தலைமையில் நடைபெற்றது.

 

 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பகவான் தரிசனம் செய்தனர். சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்ற திருக்கோவில் சார்பாக அதே நேரத்தில் 112 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.

 

 

இவர்களுக்கு கோயில் சார்பில் தங்க தாலியும், பட்டு வஸ்தரங்களையும் கோயில் நிர்வாக அதிகாரி ராமிரெட்டி வழங்கினார். திருகல்யாணத்தையொட்டி உபயதாரர்கள் முத்து அட்சதைகளை கோயிலுக்கு வழங்கினர்.

 

விழா சிறப்பாக நடைபெற்றது. நலம் தருவார் எம்பெருமான் சிவன்.....

  23 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!