Home  |  திரை உலகம்

விஜய் படத்தில் ஸ்ரீதேவி!!

சிம்பு தேவன் இயக்கி விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் ஸ்ரீதேவி. இதில் அவரது வேடம் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

 

அவர் நடித்த 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' திரையுலகில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் பிறகு அவர் கமல் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

 

தற்போது நல்ல வேடங்கள் கிடைத்தால் எனக்கு ஓகே என கூறிவருகிறார் ஸ்ரீதேவி. அவர் ஏற்கெனவே 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தில் பாரதிராஜாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஸ்ரீதேவி தற்போது தமிழ் படங்களில் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.


விஜய் - சிம்பு தேவன் படத்தில் ஸ்ரீதேவி
விஜய்யை வைத்து சிம்பு தேவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை ஸ்ரீதேவி. திருமணமாகி, இரு மகள்களைப் பெற்று, அவர்களும் திருமண வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளார் ஸ்ரீதேவி.
கடந்த ஆண்டு அவர் நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் வெளியாகி, வசூல் ரீதியாகவும் பரவாயில்லை என பேசப்பட்டது. அந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் அஜீத் நடித்திருந்தார். அப்போது நடித்தால் நாயகியாகத்தான் நடிப்பேன் என்று கூறிவந்தார். ஆனால் இப்போது நல்ல வேடங்கள் என்றால் ஓகே எனக் கூறி வருகிறார்.
இந்தி தவிர புதிய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் ஸ்ரீதேவி. ஏற்கெனவே ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கும் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் பாரதிராஜாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரீதேவி.
அடுத்து அவர் சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதில் அவருக்கு என்ன மாதிரியான வேடம் என்ற விவரம் வெளியாகவில்லை.
இதற்கு முன் கமல் படத்தில் நடிக்க ஸ்ரீதேவியிடம் கேட்டபோது அவர் ஏதோ காரணங்களுக்காக மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்