Home  |  ஆன்மிகம்

முரளீதர சுவாமிகள்

 

இந்தியாவில், தமிழ்நாட்டில் கடலூரில் மஞ்சகுப்பம் என்னுமிடத்தில் இறைபக்தி மிகுந்த ராஜகோபால ஐயர் சாவித்திரி அம்மாள் என்ற தம்பதியர்க்கு நவம்பர் 
8, 1961ம் ஆண்டு பிறந்தார்.அத்வைதம்:ஆதி சங்கரர் காட்டிய அத்வைதத் தத்துவத்தில் முரளீதரர் பரிபூரணமாக நம்பிக்கை உடையவரெனக் கூறப்படுகின்றது. 
தன் உண்மை இயல்பை உணர்வதே எல்லா உயிரினங்களின் குறிக்கோள் என எடுத்துரைக்கின்றார். குறிப்பாக இரமண மகரிஷியின் வாழ்க்கையையும் அவர் 
இயற்றிய "உபதேச உந்தியார்", "அக்ஷரமணமாலை", "உள்ளது நாற்பது" போன்ற நூல்களைப் பற்றி விரிவுரை செய்துள்ளார். இவற்றில் சில 
குறுந்தகடுகளாகவும் ஒலி நாடாக்களாகவும் புத்தகங்களாகவும் வெளி வந்துள்ளன.பக்தி:சுவாமி முரளீதரர் அத்வைதத்தில் நம்பிக்கை உடயவராக 
இருந்தாலும் கடவுளிடத்தில் பத்தியுடன் இருப்பதாலேயே ஒருவர் அந்த நிலையை அடைய முடியும் என்பதில் திட நம்பிக்கை உடையவர் ஆவார். முழுப் 
பரம்பொருள் தன்னுருவான அருள்மிகு கி்ருஷ்ணனிடமும், பாண்டுரங்கன், குருவாயூரப்பன் முதலிய தெய்வங்களிடத்திலும் அன்பான பக்தி கொள்வதே 
உகந்தது என்பது இவரது சித்தாந்தம் எனக் கூறுகின்றனர்.சைதன்ய மகாப்பிரபு நாம பிட்சா கேந்திரா:மனித இனத்தின் நலனுக்காகவும் உலக 
அமைதிக்காகவும் புறவாழ்வு மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்காகவும் ஆன்மீக விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காகவும் மக்களை பகவானின் நாமத்தைச் 
சொல்ல வேண்டுவதே இந்த அமைப்பின் குறிக்கோள். உலகத்தின் ஒவ்வொறு மூலையிலும் மகாமந்திர சங்கீர்த்தனம் ஒலித்து அதன் மூலம் மக்கள் 
பிறவிப்பிணியிலிருந்து விடுபட வேண்டும் என்பதே இந்த அமைப்பின் கொள்கை.இவ்வமைப்பின் முயற்சியால் ஒவ்வொரு ஊரிலும் வாரம் தோறும் பல 
வீடுகளில் மஹாமந்திர கீர்த்தனம் நடைபெற்று வருகிறது. இது போல் இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, இந்தொனேஷியா, சிங்கப்பூர், மலேஷியா, 
யுனைடட் கிங்டம், ஒமான், நைஜீரியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் தற்சமயம் 350க்கும் மேற்பட்ட நாம கேந்திராக்கள் செயல் பட்டு வருகின்றன.
உலக அமைதி, செழிப்பு, சகோதரத்துவம் மற்றும் இல்லற சுகங்களுக்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் திறவுகோலாக உள்ள இந்த மஹாமந்திர 
கீர்த்தனத்தைப் பெரிய அளவில் பரப்புவதற்காக நாமத்வார் துவக்கப்பட்டது.முரளீதரரின் தொகுப்புகள்:"மதுரமுரளி" சுவாமி முரளீதரரின் எண்ணங்களையும் 
நல்லுரைகளையும் எதிரொலிக்கும் மாத இதழாக வெளி வருகிறது. அக்ஷரமணமாலை, ஸ்ரீ ராமக்கிருஷ்ண பரமகம்சர், பாம்பன் சுவாமிகள், திருவலம் 
சுவாமிகள், நாம மகிமை, போன்ற தலைப்புகளில் சுவாமி முரளீதரரின் சொற்பொழிவுகள், பஞ்ச கீதஙகள், கலி தர்ம உந்தியார், ராஜ் டிவியில் சுவாமி 
முரளீதரர் சொற்பொழிவுகள் ஆகியவை ஒலிநாடாக்களாகவும், குறுந்தட்டுகளாகவும் வெளி வந்துள்ளன. சுவாமி முரளீதரரின் எண்ணங்கள், கேள்வி 
பதில்கள், மற்றும் உரைகளின் தொகுப்புகள் புத்தகங்களாகவும் வெளி வந்துள்ளன.

 

பிறப்பு:

 

     இந்தியாவில், தமிழ்நாட்டில் கடலூரில் மஞ்சகுப்பம் என்னுமிடத்தில் இறைபக்தி மிகுந்த ராஜகோபால ஐயர் சாவித்திரி அம்மாள் என்ற தம்பதியர்க்கு நவம்பர் 8, 1961ம் ஆண்டு பிறந்தார்.

 

அத்வைதம்:

 

   ஆதி சங்கரர் காட்டிய அத்வைதத் தத்துவத்தில் முரளீதரர் பரிபூரணமாக நம்பிக்கை உடையவரெனக் கூறப்படுகின்றது. தன் உண்மை இயல்பை உணர்வதே எல்லா உயிரினங்களின் குறிக்கோள் என எடுத்துரைக்கின்றார். குறிப்பாக இரமண மகரிஷியி இயற்றிய "உபதேச உந்தியார்", "அக்ஷரமணமாலை", "உள்ளது நாற்பது" போன்ற நூல்களைப் பற்றி விரிவுரை செய்துள்ளார். இவற்றில் சில குறுந்தகடுகளாகவும் ஒலி நாடாக்களாகவும் புத்தகங்களாகவும் வெளி வந்துள்ளன.

 

பக்தி:

 

     சுவாமி முரளீதரர் அத்வைதத்தில் நம்பிக்கை உடயவராக இருந்தாலும் கடவுளிடத்தில் பத்தியுடன் இருப்பதாலேயே ஒருவர் அந்த நிலையை அடைய முடியும் என்பதில் திட நம்பிக்கை உடையவர் ஆவார். முழுப் பரம்பொருள் தன்னுருவான அருள்மிகு கி்ருஷ்ணனிடமும், பாண்டுரங்கன், குருவாயூரப்பன் முதலிய தெய்வங்களிடத்திலும் அன்பான பக்தி கொள்வதே உகந்தது என்பது இவரது சித்தாந்தம் எனக் கூறுகின்றனர்.

 

சைதன்ய மகாப்பிரபு நாம பிட்சா கேந்திரா:

 

   மனித இனத்தின் நலனுக்காகவும் உலக அமைதிக்காகவும் புறவாழ்வு மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்காகவும் ஆன்மீக விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காகவும் மக்களை பகவானின் நாமத்தைச் சொல்ல வேண்டுவதே இந்த அமைப்பின் குறிக்கோள். உலகத்தின் ஒவ்வொறு மூலையிலும் மகாமந்திர சங்கீர்த்தனம் ஒலித்து அதன் மூலம் மக்கள் பிறவிப்பிணியிலிருந்து விடுபட வேண்டும் என்பதே இந்த அமைப்பின் கொள்கை.இவ்வமைப்பின் முயற்சியால் ஒவ்வொரு ஊரிலும் வாரம் தோறும் பல வீடுகளில் மஹாமந்திர கீர்த்தனம் நடைபெற்று வருகிறது. இது போல் இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, இந்தொனேஷியா, சிங்கப்பூர், மலேஷியா, யுனைடட் கிங்டம், ஒமான், நைஜீரியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் தற்சமயம் 350க்கும் மேற்பட்ட நாம கேந்திராக்கள் செயல்படுகின்றன. உலக அமைதி, செழிப்பு, சகோதரத்துவம் மற்றும் இல்லற சுகங்களுக்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் திறவுகோலாக உள்ள இந்த மஹாமந்திர கீர்த்தனத்தைப் பெரிய அளவில் பரப்புவதற்காக நாமத்வார் துவக்கப்பட்டது.

 

முரளீதரரின் தொகுப்புகள்:

 

     "மதுரமுரளி" சுவாமி முரளீதரரின் எண்ணங்களையும் நல்லுரைகளையும் எதிரொலிக்கும் மாத இதழாக வெளி வருகிறது. அக்ஷரமணமாலை, ஸ்ரீ ராமக்கிருஷ்ண பரமகம்சர், பாம்பன் சுவாமிகள், திருவலம் சுவாமிகள், நாம மகிமை, போன்ற தலைப்புகளில் சுவாமி முரளீதரரின் சொற்பொழிவுகள், பஞ்ச கீதஙகள், கலி தர்ம உந்தியார், ராஜ் டிவியில் சுவாமி முரளீதரர் சொற்பொழிவுகள் ஆகியவை ஒலிநாடாக்களாகவும், குறுந்தட்டுகளாகவும் வெளி வந்துள்ளன. சுவாமி முரளீதரரின் எண்ணங்கள், கேள்வி பதில்கள், மற்றும் உரைகளின் தொகுப்புகள் புத்தகங்களாகவும் வெளி வந்துள்ளன.

 

 

 

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!