Home  |  அறுசுவை

கீரை பக்கோடா(spinach pakkota)

தேவையானவை:

 

ஏதாவது ஒரு கீரை-சின்ன கட்டு

கடலை மாவு-1 கப்

அரிசி மாவு-1 டீஸ்பூன்

ரீபைன்ட் எண்ணெய்-பொரிக்கத் தேவையான அளவு

பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு - தேவைக்கேற்ப

பச்சை மிளகாய் - 2

இஞ்சி-சிறு துண்டு

சீரகம்-1/2 டீஸ்பூன்

உப்பு-தேவையான அளவு

 

 

செய்முறை:

 

1. கீரையை பொடியாக நறுக்கி அலசி ஒரு துணியில் விரித்து உலர வைத்துக் கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றுடன் இஞ்சி, பச்சை மிளகாய் அரைத்து போட்டு, அத்துடன் முந்திரிப்பருப்பு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

2. இத்துடன் கீரையை சேர்த்து பக்கோடா மாவு தயாரிக்கவும். தண்ணீர் சேர்த்து பிசிறினாற்போல் உதிரியாக தயாரிக்கவும்.

3. வாணலியில் எண்ணெய் விட்டு காயவைத்து காய்ந்த எண்ணெயில் 2 டீஸ்பூன் பக்கோடா மாவில் விட்டு பிசிறி எண்ணெய் காய்ந்ததும் சிறிது சிறிதாக கிள்ளிப்போட்டு எடுக்கவும். சாப்பிட மிகவும் சுவையான சத்தான டிபன் இது.

 

 

Spinach Pakkoda

Ingredients for Spinach Pakkoda :


Chopped Spinach Leaves - a small bunch,

Bengal Gram Flour - 1 Cup,

Rice Flour - 1 tsp,

Cashew Nuts - as needed(finely chopped),

Ginger - Small Piece,

Green Chilies - 2,

Salt - as required, 

Cumin - 1/2 tsp,

Oil - as needed. 


Method to make Spinach Pakkoda :


1. Wash and chop the spinach leaves finely. 

2. Mix up the Bengal Gram flour, rice flour, grinded green chilies and ginger, cashew nuts, cumin and salt then add finely chopped spinach leaves. Put this mixture into boiled oil and add some water then prepare pakkoda batter. 

3. Heat oil in a frying pan and take this batter in small size in our hand and drop this into oil and allow it to boil.

Tasty Spinach Pakkoda is ready to serve.  




  07 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!