Home  |  திரை உலகம்

கத்தி இசை வெளியீட்டு விழா : சுவாரசிய தகவல்கள் !!

துப்பாக்கி படத்தை தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் கத்தி.


இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். 


கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. 


இந்த விழாவில் ஆர்.பி.செளத்ரி, எஸ்.ஏ.சந்திரசேகரன், ஏ.எல்.விஜய், தாணு, ஆர்யா, விக்ரமன், தனஞ்செயன், கத்தி படக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சரியாக 7.10க்கு தொடங்கி 9 மணிக்கெல்லாம் விழா நிறைவடைந்தது.


இந்த விழாவில், முக்கிய பிரபலங்கள் பேசிய சுவாரசிய தகவல்கள் பின்வருமாறு, 


எனக்கும் தமிழ் உணர்வு உள்ளது : முருகதாஸ் !!


ஏ.ஆர்.முருகதாஸ். பேசுகையில், கத்தி படத்தில் விஜய் ஜீவானந்தம், கதிரேசன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். 


நான் விஜய்யிடத்தில், துப்பாக்கி ஜெகதீஷ், கத்தி ஜீவானந்தம், கதிரேசன் இவர்களில் யாரை உங்களுக்கு பிடிக்கும் என்றேன் அவர் கதிரேசன்தான் பிடிக்கும் என்றார். எனக்கும் அப்படித்தான். அதேபோல் ரசிகர்களுக்கும் கதிரேசனைத்தான் பிடிக்கும்.


அதோடு, துப்பாக்கி படத்தைவிட கத்தி படம் ரசிகர்களுக்கு இன்னும் அதிகமாக பிடிக்கும். அந்த அளவுக்கு விஜய்யின் கதாபாத்திரம் அழுத்தமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.


மேலும், நான் பணத்துக்காக பாலிவுட்டுக்கு சென்று படம் இயக்கவில்லை. சென்னைக்கு அப்பால் உள்ள ஊரில் இருந்து வந்த ஒருவனாலும் பாலிவுட்டில் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கத்தான் எடுக்கிறேன். 


நானும், விஜய்யும் பணத்திற்காக மட்டுமே படமெடுக்கவில்லை. அதோடு, நானும் பச்சை தமிழன்தான். எனக்கும் தமிழ் உணர்வு உள்ளது என்பதை இந்த தருணத்தில் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்றார்.  


நான் தியாகியும் அல்ல... துரோகியும் அல்ல... விஜய் !!


ஒருவரை ஒருவர் சண்டை போட்டுக்கணும்ங்கிறதுக்காக நாங்க படம் எடுக்கல. எல்லாரும் சந்தோஷமா ரசிக்கணும்னுதான் படம் எடுக்கிறோம். என்னைத் தியாகின்னு சொல்லமாட்டேன். ஆனா, நான் துரோகி கிடையாது. இது தமிழ்நாடு. நான் தமிழன்.


எந்த மக்களுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ படம் பண்ணவில்லை. உண்மைக்கு விளக்கம் சொன்னா தெளிவு கிடைக்கும். வதந்திக்கு விளக்கம் சொன்னா உண்மை ஆகிடும். என சூசகமாக பேசி முடித்தார் நடிகர் விஜய். 


இதில் சமந்தா பேசும்போது, ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியில் துப்பாக்கி படம் சூப்பர் ஹிட் ஆனது. அதேபோல் இவர்கள் கூட்டணியில் கத்தி படம் உருவாக இருப்பதாக தகவல் தெரிந்ததும் இதில் விஜய் ஜோடியாக யார் நடிக்கப் போறாங்க என்ற ஆர்வமும். அதில் நான் நடிக்க வேண்டும் என்றும் ஆசையும் இருந்தது. 


அந்த சமயத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் எனக்கு போன் செய்து கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீ தான் நடிக்க வேண்டும் என்று கூறியது. எனக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது என்று கூறினார் சமந்தா.


சமந்தா மாதிரியான பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள ஆசை : சதீஸ் 


விழாவில் சதீஷ் பேசும் போது, நான் சமந்தா மாதிரியான பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறினார். அதற்கு சமந்தா சதீஷிடம் நீ ஆசைப்படுவது போல் உன்னையே கல்யாணம் கட்டிக்கிறேன் என்று மேடையில் கூறினார். சமந்தா இவ்வாறு தமாஷாக கூறியதை கேட்டதும் சதீஷ் முகத்தில் பிரகாசம் தெரிந்தது. 


ஆக, கத்தி பட இசை வெளியீட்டு விழா பெரிய சர்ச்சைகளுக்கு நடுவே நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் அமைதியான முறையில் நடந்தது முடிந்தது.  


 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்