Home  |  அறுசுவை

சோயா மட்டர் புலாவ் (Soya Mutter Pulao)

தேவையானவை :

 

பாசுமதி அரிசி - 1 கப்,

பெரிய வெங்காயம் - 1,

பச்சைப் பட்டாணி - அரை கப்,

தக்காளி - 1,

பட்டை- 2,

கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்,

சோயா உருண்டைகள் -முக்கால் கப்,

உப்பு - தேவைக்கேற்ப

கிராம்பு - 2,

ஏலக்காய் - 2,

பிரியாணி இலை - 1.

இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்,

நெய் - 1 டேபிள்ஸ்பூன்,

பச்சை மிளகாய் - 2,

 

செய்முறை :

 

1.முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை 20 நிமிடங்கள் ஊற வைத்து, அதை வடிகட்டி, 1 டீஸ்பூன் நெய்  விட்டு வறுத்து எடுக்கவும். மீதி நெய்யில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளிக்கவும். இதனுடன் வெங்காயத்தை நீளமாக நறுக்கிச் சேர்க்கவும். இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.

2.வதங்கியதும் கரம் மசாலா, தக்காளி, பட்டாணி சேர்க்கவும். சோயா உருண்டைகளை ஐந்து நிமிடங்கள் வெதுவெது நீரில் போட்டு, பிழிந்து எடுத்துச் சேர்க்கவும்.அரிசியும் சேர்த்து, ஒன்றுக்கு ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து, குக்கரில் 2 விசில் வைத்து இறக்கவும். தயிர் பச்சடி அல்லது சாஸுடன் பரிமாறவும்.

Soya Mutter Pulao

Ingredients for Soya Mutter Pulao:

 

Basmati Rice-1 Cup,

Large Onion-1,

Green Peas-1/2 Cup,

Tomato-1,

Cinnamon-2,

Garam Masala Powder-1/4 Tsp,

Soya Balls-3/4 Cup,

Salt-as Needed,

Cloves-2,

Cardamom-2,

Bay Leaf-1,

Ginger, Garlic paste-2 Tsp,

Ghee-1 Tbsp,

Green Chilies-2.

 

Procedure to make Soya Mutter Pulao:

 

1. Soak the rice for 20 minutes. Then drain the water and fry the rice along with 1 tsp of ghee. In remaining ghee, fry the cinnamon, cloves, cardamom and bay leaf. Then add onion, ginger and garlic paste.

2. Then add garam masala powder, tomato and green peas. Take the soya balls and put in warm water and squeeze well and then add into pulao. Add rice along with 1:1/2 of water and salt. Allow 2 whistles and remove from flame. Serve along with curd pachadi or sauce.

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!