Home  |  திரை உலகம்

சூரன் ( Sooran )

சூரன் ( Sooran )

Movie Name: Sooran சூரன்
Hero: KARAN
Heroine: Shipali Sharma
Year: 2014
Movie Director: Balu Narayanan
Movie Producer: Arowana Pictures
Music By: P.B.BALAJI


சென்னையில் உள்ள ஒரு குப்பத்தில் தந்தை மணிவண்ணன் மற்றும் பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் கரண். இவர் ரவுடி மகாதேவனிடம் ஆடியாளாக இருக்கும் இவர், தன் நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு குடிப்பது, ஊரில் இருப்பவர்களை மதிக்காமல் ரவுடித்தனம் செய்வது என வலம் வருகிறார். சென்னையில் மற்றொரு ரவுடியான பொன்வண்ணனுக்கும், மகாதேவனுக்கும் பிரச்சனை இருந்து வருகிறது. ஒருநாள் பொன்வண்ணனின் ஆட்களை கரண் அடித்துவிடுகிறார். இதனால் மகாதேவனையும் அவருக்கு பக்கபலமாக இருக்கும் கரணையும் அழிக்க நினைக்கிறார் பொன்வண்ணன்.

இதற்கிடையில் கரண் இருக்கும் குப்பத்தில் மற்றொரு நாயகனான சதீஷ் குடியேறுகிறார். ஒரு அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். ஒரு நாள் சதீஷ் இல்லாத போது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் குடித்துவிட்டு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கிறார் கரண். இதனால் கரண் மீது சதீஷ் கோபமடைகிறார். ஒருநாள் கரண் சாலையில் ஒரு பெண்ணை சந்திக்கிறார். உடனே அந்த பெண்ணை அடைய வேண்டும் என்று நினைக்கிறார். சிறிது நேரத்திலேயே அந்த பெண் காணாமல் போகிறார். எப்படியாவது அந்த பெண்ணை தேடி கண்டுபிடித்து அடைய நினைக்கிறார். அப்போது சதீஷ் வீட்டில் இருந்து அந்த பெண் வருவதை பார்க்கிறார். அதன்பின் அந்த பெண் சதீஷின் சகோதரி ஷீபாலி என்று தெரிந்துக் கொள்கிறார்.

பிறகு ஷீபாலியை எப்படியாவது அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தன் நண்பன் ஜெகன் மூலம் சதீஷ் குடும்பத்தின் முழு விவரமும் சதீஷின் அப்பா சதீஷுக்கு எழுதிய கடிதத்தையும் பெறுகிறார். ஷீபாலிக்கு திருமணம் நிச்சயம் செய்திருப்பதாகவும் அதற்கு ஒரு லட்சம் பணம் தேவை என்றும் கரண் அறிகிறார். இதையடுத்து சதீஷுக்கு தெரியாமல் அவருடைய ஊருக்கு தன் நண்பன் ஜெகனுடன் செல்கிறார் கரண். அங்கு சதீஷின் நண்பன் என்று கூறிக்கொண்டு ஒரு லட்சம் பணமும் தருகிறார். பிறகு அவர்கள் வீட்டிலேயே தங்குகிறார். ஆனால் அவர்கள் குடும்பமோ கரண் மீது பாசம் காட்டுகிறது. ஒரு விபத்தில் இருந்தும் கரணை காப்பாற்றுகிறார் ஷீபாலி.
இதற்கிடையில் சென்னையில் கரணின் கூட்டாளி என்று நினைத்து சதீஷை போலீஸ் கைது செய்கிறது. பிறகு அவரை வெளியில் அழைத்து வரும் மகாதேவன், அவரை தன்னுடன் வரும்படி அழைக்கிறார். இதற்கு சதீஷ் மறுப்பு தெரிவித்து சென்று விடுகிறார். இறுதியில் சதீஷ், மகாதேவன் கும்பலில் சேர்ந்தாரா? ஷீபாலியை அடையும் நோக்கத்தில் சென்ற கரண் என்ன ஆனார்? ரவுடியான பொன்வண்ணன் மகாதேவனையும் கரணையும் தீர்த்து கட்டினாரா? என்பதே மீதிக்கதை.

 

  14 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்