Home  |  திரை உலகம்

சூறையாடல் ( Sooraiyadal )

சூறையாடல் ( Sooraiyadal  )

Movie Name: Sooraiyadal சூறையாடல்
Hero: Sribalaji
Heroine: Leema Babu
Year: 2014
Movie Director: Thamara Kannan
Movie Producer: Thrilok Productions
Music By: Mithuneaswar

பெரிய இடத்துப் பெண்ணுடன் தவறான உறவு வைத்திருக்கும் ஜெயனை, மனைவி கண்டிக்கிறார். கண்டிக்கும் மனைவியைக் கொன்றுவிட்டு, தற்கொலை நாடகமாடுகிறார் ஜெயன். மகனும் மகளும் அவரிடமிருந்து பிரிந்து பாட்டியிடம் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். தங்கை லீமாவை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார் ஸ்ரீபாலாஜி. உடல்நலமில்லாத அவரை மருத்துவரிடம் அழைத்து செல்லும்போதுதான் லீமா கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிகிறது. அதிர்ச்சியடையும் அவர், குடும்ப மானம் காக்க தங்கையுடன் தற்கொலை செய்ய முடிவு செய்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ்.


அண்ணன், தங்கை பாசத்தைப் பிழியப் பிழிய சொல்லும் படங்களின் வரிசையில் புதிதாக வந்திருக்கிறது இது. ஆனால், இதில் பாசத்துக்குப் பதிலாக, பதற்றம் மட்டுமே தெரிகிறது. லீமா மீது முரட்டுத்தனமான பாசம் பொழிந்து, அவரையே தன் உலகமாக நினைக்கும் ஸ்ரீபாலாஜி, படம் முழுக்க உருகுகிறார். 



ஆனால், தங்கை கர்ப்பமாக இருப்பதை அறிந்த அவர், அதுபற்றி எதுவும் விசாரிக்காமல், அவரைக் கொல்வதற்கு அழைத்துச் செல்வதில், இதுவரை வைத்த பாசம் பொட்டென்று கவிழ்ந்துவிடுகிறது. தங்கைக்கு காதல் கடிதம் கொடுத்தவன்தான், அவள் கர்ப்பமாக இருப்பதாக, லேப் ரிப்போர்ட்டை மாற்றிக் கொடுத்தவன் என்ற சின்ன துருப்புச்சீட்டு, நிமிர வைக்கிறது. ஆனால், லீமாவை செல்போனில் விதவிதமாக போட்டோ எடுத்த தன் நண்பன் மீது சந்தேகப்படும் ஸ்ரீபாலாஜி, நண்பன் உண்மையைக் கண்டுபிடித்து சொல்ல வரும்போது, அவசரப்பட்டு அவரைக் கொல்வது, ஹீரோ கேரக்டரை டொப்பென்று மாற்றுகிறது. 


பாடிலாங்குவேஜ் என்ற பெயரில், வில்லன் மருதுவின் சேஷ்டைகள் படுத்தி எடுக்கிறது. ஹீரோவை விரட்டிச்சென்று காதலிக்கும் காயத்ரி, கடைசிவரை அதை மட்டுமே செய்கிறார். தங்கை கேரக்டரில் லீமா, வாழ்ந்திருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறியாத அவர், எதற்காக அண்ணன் தன்னை இப்படி திட்டுகிறான் என்று புரியாமல் தவிக்கும்போதும், பாசமாக வளர்த்த அண்ணன் கையாலேயே பிணமாகப் போகிறோம் என்பது தெரியாமல் செல்லும்போதும், உச் கொட்ட வைக்கிறார். அவரது முடிவு, எதிர்பாராதது. அப்பா ஜெயன், அம்மா அம்மு மனதில் பதிகிறார்கள். 


அகிலேஷின் ஒளிப்பதிவு, வறண்ட பூமியின் வளமையைக் காட்டியிருக்கிறது. மிதுன் ஈஸ்வரின் பின்னணி இசை, கதையை நடத்த உதவுகிறது. இந்தக்காலத்தில் இப்படியொரு பாசம் சாத்தியமா என்று கேட்க வைக்கும் இயக்குனர், திரைக்கதையில் இன்னும் அழுத்தம் செலுத்தியிருந்தால் அந்த பாசத்தில் மூழ்கியிருக்கலாம். 

  13 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை
BiggBossல் ஜுலி தான் ஜெயிப்பார்- பிரபல நடிகரின் டுவிட்
விவேகம் இரண்டாவது பாடல் பற்றி அனிருத் அதிரடி தகவல்
பிக் பாஸ் போட்டியாளர்களுடன் இப்படி ஒரு ஒப்பந்தமா?வெளிவந்த அதிர்ச்சி தகவல்
மெர்சல் படத்தில் விஜய்யின் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் இதுதானா- உறுதியான தகவல்
மெர்சல் படத்தில் விஜய்யின் ஒரு கேரக்டர் உறுதியானது- வெளியான புகைப்படம்
பொய் சொன்ன ஜூலியை மாட்டி விட்ட ஆர்த்தி...
BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு வார சம்பளம் மட்டும் இவ்வளவா?
விஜயின் தெறி படத்தால் நடந்த சுவாரசியமான சம்பவம்! எத்தனை பேருக்கு தெரியும்