Home  |  திரை உலகம்

சூது கவ்வும் ( Soodhu Kavvum )

சூது கவ்வும் ( Soodhu Kavvum )

Movie Name: Soodhu Kavvum சூது கவ்வும்
Hero: VIJAY SETHUPATHI
Heroine: SANCHITA SHETTY
Year: 2013
Movie Director: Nalan Kumarasamy
Movie Producer: THIRU KUMARAN ENTERTAINMENT
Music By: Santhosh Narayanan


விஜய் சேதுபதியின் நடிப்பு.அவர் முக ராசி,தாடி என்று அனைத்துமே அந்த தாஸ் கேரக்டருக்கு மிக பொருத்தமாக இருக்கிறது. தாடி தான் சேதுபதிக்கு பெரிய ப்ளஸ். தமிழில் கிடைக்கும். வங்கி மேனேஜர் மகளை கடத்தி அவர் ஆபீசுக்கு நேரே சென்று பணத்தை வாங்கிவிட்டு திரும்பிவரும் காட்சிக்கு விசில் பறக்கின்றது. படத்தின் நேர்த்தியான திரைக்கதை குற்றமே சொல்லமுடியாத திரைக்கதை. இது தான் நடக்குமென்று எதிர்பார்ப்போம்.ஆனால் கடைசிவரைக்கும் அது நடக்கவே நடக்காது.எதிர்பார்க்காத ஒன்றில் கொண்டுபோய் முடிப்பார் இயக்குனர்.

.'காசு பணம் துட்டு மணி மணி..' என்ற பாடலும் 'ட்ரவுசர் கழண்டிரிச்சே' என்கின்ற பாடலும் ரசிக்கக்கூடியன. பின்னணி இசை என்று பெரிதாக சொல்லிக்கொள்ள ஏதுமில்லாவிட்டாலும், படத்தின் 'திரில்லிங்'கை எவ்விடத்திலும் சந்தோஷ் நாராயணன் குழப்பிவிடவில்லை. தாஸ்' அண்ட் கோ'வுக்கு பிற்பாதியில் மிகப்பெரும் உதவிபுரியும் கதாபாத்திரமான மேட்டர் பட டைரெக்டர் 'டாக்டர் தாதா',சைக்கோ போலீஸ் 'பிரம்மா' ஆகியோருக்கான 'இன்ட்ரோ' முதல் பாதியிலேயே கொடுக்கப்படுவது சிறப்பு. கதையின் இடைவேளைக்கு பிந்திய பாகத்தில் வரும் முக்கிய இரு கேரக்டர்கள் இவர்கள் இருவரும்.ஆனால் முதல் பாதியில் அப்படி நினைத்திருக்கவில்லை. சீரியசான திரில்லிங் கதையா இல்லை காமெடி கதையா என்று ஜோசிக்க வைக்குமளவுக்கு ஒவ்வொரு சீனிலும் ஏதாவது ஒரு காமெடி இருக்கும்.

இறுதியில் போலீஸ் துரத்தி வந்து பிடிக்கும் சமயத்தில் பின்னாடி இருந்து தாஸ் காங் ஆள் ஒருத்தன் துப்பாக்கியை பிரம்மாவை நோக்கி நீட்டுவான். பிரம்மா அசட்டு சிரிப்பு சிரிக்க,அதே துப்பாக்கியால் பிரம்மாவின் மூக்கை உடைத்துவிட்டு 'துப்பாக்கி காட்டி மிரட்டிக்கிட்டிருக்றேன்..நீ சிரிக்கிறே?' இப்படி ஏகப்பட்ட சீரியஸ் சீன்களுக்குள் காமெடியை நுழைத்து சிரிப்பை படம் முழுவதும் மெயின்டெயின் பண்ணியது படத்துக்கு சிறப்பு. பெண் கதாபாத்திரம் என்று படத்தில் வருவது என்னமோ தாஸை மாமா! மாமா! என்று சுற்றிவரும் 'ஷாலு' என்கின்ற கற்பனை கதாபாத்திரம்.இந்த பெண் கதாபாத்திரம் தாஸுக்கு மட்டுமே புலப்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது

.படத்தில் இவர்களின் கடத்தல்கள் அனைத்திலும் தாஸுடன் ஒட்டிக்கொண்டு வருகிறாள். மினிஸ்டர் ஞானோதயமாக வரும் எம் எஸ் பாஸ்கரின் மனைவி பாஸ்கரின் நடிப்பு,சைக்கோ போலீஸ் பிரம்மாவின் நடிப்பு என்று அவரவர் பாத்திரங்களில் ஒவ்வொருவரும் திறமையை வெளிக்காட்டியிருக்கின்றனர்.

 

  16 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
வனமகன்– திரைவிமர்சனம்
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் – திரைவிமர்சனம்
ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து அப்படி ஒரு வார்த்தை வருது கஷ்டம்- விஜய்யை புகழ்ந்த அட்லீ
மெர்சல் பர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் தரப்பிலிருந்து வந்த பாராட்டு
இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை
வருங்கால முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
விஜய்யின் மெர்சல் டைட்டில் சொல்ல வருவது இதுதான், கவனித்தீர்களா?