Home  |  திரை உலகம்

சொன்னா புரியாது ( Sonna Puriyathu )

சொன்னா புரியாது ( Sonna Puriyathu  )

Movie Name: Sonna Puriyathu சொன்னா புரியாது
Hero: SHIVA
Heroine: Vasundhara Kashyap
Year: 2013
Movie Director: Krishnan Jayaraj
Movie Producer: 360 Degree Film Corp
Music By: Yathish Mahadev


சிவா சரியான வாழ்க்கையை தனக்கு பிடித்தமாதிரி சரியாக என்ஜாய் பண்ணும் மனிதர். ஆனாலும் அவங்க அம்மா மீரா கிருஷ்ணனுக்கும் பாட்டி வத்சலாவுக்கும் அப்படி ஒரு நல்ல பிள்ளை! மகனுக்கு நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டுமென்பது மீரா கிருஷ்ணனின் ஆசை! ஆனால். ‘எங்‌கே தனது ஜாலி லைப் காலியாகிவிடுமோ?’ என்னும் பயத்தில் திருமணப் பேச்சே எட்டிக்காயாக கசக்கிறது! இருந்தாலும் அம்மாவின் பாதயாத்திரை பயமுறுத்தலுக்காக ஒரு பெண்ணை பார்த்து கல்யாணத்திற்கும் சம்மதிக்கிறார். அந்தப்பெண் ஹீரோயின் வசுந்தரா. அப்பா ஆர்.எஸ்.சிவாஜியின் பழைய பாடல் பயமுறுத்தலுக்காக கல்யாணத்திற்கு சம்மதிக்கும்,

இப்படி பெரியவர்களின் முன்னிலையில் இருவரும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டு தங்களுக்கு நடக்க இருக்கும் திரமணத்தை தாங்களே தடுக்க போடும் மாஸ்டர் பிளான்கள் காமெடியாவதும், அதுவே இருவருக்குள்ளும் காதலை எழுப்புவதும்தான் ‘சொன்னா புரியாது’ . சிவா, பேசுவது புரியாது, நிறைய பேசிக்கொண்டே இருப்பார் என்னும் பரவலான குற்றச்சாட்டு இந்தப் படத்திலும் பிரதிபலித்திருக்கிறது. கடைசி இரண்டு மூன்று ரீல்களையும் அதே பெப்பில் நகர்த்தி சென்றிருந்தீர்கள் என்றால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்! சரி, அதுபோகட்டும்.. நைஸ் கோட், இப்போ நைட் நேரம் எல்லா கல்யாண மண்டபமும் மூடியிருக்கும்.

காலையில போய் பார்க்கலாம்... உள்ளிட்ட டயலாக்குகள் எல்லாம் டயலாக் வெடிகளா?! ஹாவ்! என்னமா வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறீர்கள் சிவா?! ஆனாலும் தமிழ் படத்தில் ஆரம்பித்த குசும்பு படத்துக்கு படம் பிறர் படங்களை நக்கலடித்தே தீர வேண்டுமா என்ன? சிவா, வசுந்தரா மாதிரியே கங்கை அமரன், சிங்கமுத்து, ஆர்த்தி, ஆர்.எஸ்.சிவாஜி, மீரா கிருஷ்ணன், அல்வா வாசு, பிளேடு சங்கர், வத்சலா பாட்டி, ஃபன் ஆண்டர்சன் உள்ளிட்ட கெஸ்ட் ரோல், டெஸ்ட்ரோல் நடிகர்களும் சும்மா ஒரு பேச்சுக்கு கூட பெஸ்ட்ரோல் செய்திருக்கின்றனர். இந்த வீட்டுல பொண்ணு எடுக்க வேணாம்.. என ரிட்டயர்டு பாரஸ்ட் ஆபீசர் - ஆர்.எஸ்.சிவாஜி முன் ‘டேபும்’ கையுமாக அலட்டும் அலட்டல் இருக்கிறதே! சிவா - வசுந்தராவின் இயல்பான நடிப்பு, சரவணன் சந்துருவின் வசனம், யத்தீஷ் மகாதேவ்வின் இனிய இசை, சரவணனின் அழகிய ஒளிப்பதிவு, கிருஷ்ணன் ஜெயராஜின் எழுத்து, இயக்கம் உளளிட்ட ப்ளஸ் பாயிண்ட் ‘சொன்னா புரியாது’.

  16 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்