Home  |  திரை உலகம்

சினேகாவின் காதலர் ( Snehavin Kadhalarkal )

சினேகாவின் காதலர் ( Snehavin Kadhalarkal )

Movie Name: Snehavin Kadhalarkal சினேகாவின் காதலர்
Hero: THILAK
Heroine: ADVAITHA
Year: 2014
Movie Director: Muthuramalincoln
Movie Producer: Tamilan Kalaikkoodam
Music By: R.Prabahar


துணிச்சல் மிகுந்த கம்ப்யூட்டர் காலத்து பெண், கீர்த்தி ஷெட்டி. தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையிடம், என்னை பிடிக்கவில்லை என்று சொல்லி விடுங்கள் என்று துண்டு சீட்டு எழுதி கொடுத்து திருமணத்தை நிறுத்தி விடுகிறார். அந்த மாப்பிள்ளையை அவரே ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, கர்ப்பமாக இருப்பதை நிரூபிக்கிறார். கர்ப்பத்துக்கு காரணமான காதலரை காட்டுகிறேன் என்று பெண் பார்க்க வந்த இளைஞரை கொடைக்கானலுக்கு அழைத்து செல்கிறார். அப்போது தான் இதுவரை சந்தித்த ஆண்களையும், அவர்கள் மீதான தனது காதலையும், அந்த காதல் எல்லாமே பாதியில் முடிந்து போனதையும் சொல்கிறார்.

கடைசியாக, தனது கர்ப்பத்துக்கு காரணமானவருடன் எப்படி காதல் துளிர்த்தது? என்பதை சொல்கிறார். கதையின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி. கதை முழுவதும் இவர் மீதே பயணிக்கிறது. ஒவ்வொரு இளைஞருடன் இவருக்கு ஏற்படும் காதலையும், அந்த காதல் நிறைவேறாமல் போகும்போது ஏற்படும் ஏமாற்றத்தையும் மிக இயல்பாக பிரதிபலிக்கிறார். இவருடைய சிரித்த முகம், சினேகா என்ற கதாபாத்திரத்துக்கு அத்தனை பொருத்தம். அவனை பார்ப்பதற்கு முன்பு உங்களை பார்த்திருந்தால், விழுந்திருப்பேன் என்று இவர் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லும் இடத்தில், தியேட்டரில் கைதட்டுகிறார்கள். காதலர்களாக வரும் புதுமுகங்கள் அனைவரும் யதார்த்தமான முகங்கள்.

கீர்த்தி ஷெட்டி புத்தகத்துக்குள் வைத்துக் கொடுத்த ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திருப்பிக் கொடுக்க முயற்சிப்பதும், பின்னர் அதை ஏற்றுக்கொள்வதும், ஒரு ஏழை காதலனை கண்முன் நிறுத்துகிறது. படத்தின் மிக சிறந்த அம்சம், கவித்துவமான வசன வரிகள். நிகழ்கால காதலை மிக துணிச்சலுடன் சித்தரித்து இருக்கிறார், டைரக்டர் முத்துராமலிங்கன். ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வே இல்லாமல் சுவாரஸ்யமாக நகரும் காட்சிகள், படத்தின் பலம்.

  15 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்