Home  |  திரை உலகம்

புலி டைட்டிலை முதலில் வைத்திருந்தது யார் தெரியுமா?

புலி டைட்டிலை முதலில் வைத்திருந்தது யார் தெரியுமா?

விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு புலி எனப் பெயர் வைத்துள்ளார்கள்.

புலி தலைப்பை முதலில் எஸ்.ஜே சூர்யா தான் வைத்திருந்தார். ஆனால் தற்போது விஜய் கேட்டதால் கொடுத்து விட்டதாக கோடம்பாக்கம் தகவல்கள் சொல்கிறது.

தொடர் தோல்விகளால் தடுமாற்றத்தில் விஜய் இருந்த நேரம் அது. அந்த சமயத்தில், விஜய்க்கு தமிழ் சினிமாவில் குஷி என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா. இப்படம்தான் விஜய்க்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்து அவரது மார்க்கெட் ஏறுமுகத்தை நோக்கி ஸ்திரமாக உயர்ந்தது.

தனக்கு புது வாழ்க்கை அமைத்துக் கொடுத்த படம் குஷி என்று விஜய்யே பலமுறை கூறியுள்ளார். எஸ்.ஜே. சூர்யா வைத்திருந்த இந்த நிலையில் சூர்யாவும், விஜய்யும், அப்பச்சன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் இணையத் திட்டமிட்டனர். படத்திற்குப் புலி என்று பெயர் வைத்தார் சூர்யா. ஆனால் திடீரென இந்தப் படத்திலிருந்து விலகிக் கொண்டார் விஜய். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. இந்தப் படத்தின் திரைக்கதை வடிவமைப்பில் நடிகர் சிம்பு தலையிட்டதாகவும், இதை விஜய் விரும்பாமல் விலகிக் கொண்டதாகவும் பேச்சு அடிபட்டது. அதன் பின்னர் தெலுங்கில் தனது புலியை வேறு பெயரில், வேறு விதமான கதையில் படமாக்கி ஹிட்டாக்கினார் சூர்யா. அதன் பின்னர் விஜய்யும், சூர்யாவும் இணையவில்லை.

ஷங்கரின் நண்பன் படத்தில் நடிகர்களாக வந்து போயிருந்தார்கள். இடையில் எஸ்.ஜே.சூர்யாவின் இசை படத்தின் ஆடியோ ரிலீஸின்போது சிறப்பு விருந்தினராக விஜய் கலந்து கொண்டார். தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் விஜய்க்கு ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் என இரண்டு நாயகிகள்.

இப்படத்திற்கு மாரீசன், கருடா, போர்வாள், புலி எனப் பல்வேறான பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இறுதியில் புலி என்ற பெயரே சரியாக இருக்கும் எனப் படக்குழுவினர் முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து விஜய்யே நேரடியாக சூர்யாவிடம் பேசி டைட்டிலை தருமாறு கேட்டாராம். அதை உடனடியாக ஏற்றுக் கொண்ட சூர்யா, டைட்டிலை விட்டுக் கொடுத்து விட்டதாக சொல்கிறார்கள்.

விஜய்க்காக டைட்டில்தானம் செய்வது சூர்யாவுக்கு இது முதல் முறையல்ல. இதற்குமுன் வில்லு என்ற டைட்டிலையும் எஸ்.ஜே.சூர்யா தான் வைத்திருந்தார் என்பதும் விஜய் கேட்டதால் அதை விட்டுக்கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது புலியையும் விட்டுக் கொடுத்துள்ளார்..

வில்லு படத்தின் கதி புலிக்கு நேராமல் இருந்தால்... பரவாயில்லை.... 

  05 Jan 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்