Home  |  திரை உலகம்

என் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்தியவர் எஸ்.ஜே.சூர்யா : விஜய் !!

எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்து, இசை அமைத்திருக்கும் படம் இசை. 


இசை அமைப்பாளர் சம்பந்தப்பட்ட இந்த கதையில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக சாவித்திரி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சத்யராஜ் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 


இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில், விஜய், தனுஷ், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில், எஸ்.ஜே.சூர்யா குறித்து நடிகர் விஜய் பேசும்போது,  குஷி படத்திற்கு முன்பு வாழ்வா சாவா என்கிற நிலை எனக்கு இருந்தது. இந்தப்படமும் ஓடவில்லை என்றால் என்னாகும் என்ற  கேள்வி இருந்தது.


அந்த நேரத்தில் 'குஷி' என்கிற வெற்றிப்படம் கொடுத்து என்னை தூக்கி விட்டவர் சூர்யா சார். இப்போது அதற்கு நன்றி சொல்கிறேன். 'குஷி' ரிலீஸ் ஆனவுடன் விக்ரமன் சார் கேட்டார் எப்படி விஜய் இதை ஏற்றுக் கொண்டு நடித்தீர்கள்? கதையே இல்லையே? என்றார்.


நான் சொன்னேன் சரிதான். ஆனால் எஸ்.ஜே..சூர்யா என்று ஒருவர் இருக்கிறார் என்றேன். அவர் கதை சொல்லிக் கேட்க வேண்டும். அப்படி அசத்துவார். நம்மை அப்படியே வசியம் செய்துவிடுவார்.


'நண்பன் படம் உருவாக்கி கொண்டிருக்கும் போது தான் இசை படத்தின் கதையை என்னிடம் சொன்னார். நன்றாக இருந்தது. அவர் தனித்தன்மையான டைரக்டர். 


இசையமைப்பாளராகவும் வெற்றி பெற எனது வாழ்த்துகள். என மனம் திறந்து பேசினார் விஜய். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்