Home  |  திரை உலகம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் காக்கிசட்டை எந்த மாதிரியான கதை !!

தனது காமெடி நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இடம் பிடித்துள்ள சிவகாத்திகேயன், தற்போது காக்கி சட்டை படத்தில் ஆக்சன் அவதாரம் எடுத்திருக்கிறார். 


அதுவும் காக்கி சட்டை போட்ட போலீசாக ஆக்சனில் பின்னி எடுக்க போகிறாராம். காக்கி சட்டை படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து சிவகார்த்திகேயன் கூறும் போது, 


இந்த படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் காக்கிசட்டை கதையை சொல்ல வந்தபோது பத்துபேரை பறந்து அடிக்கிற கதைன்னுதான் நினைச்சேன். ரஜினி மாதிரி, கமல் மாதிரி, சூர்யா மாதிரி, விக்ரம் மாதிரின்னு கற்பனை பண்ணினேன். 


ஆனால் இந்த கதை அப்படி இல்லை. போலீஸ் வேலைய கனவா நினைச்சு சேர்ந்து அதை ரசிச்சு பண்றவனோட கதை. ஒரு நேரத்தில் பத்து ஆளை பறக்க விடுற போலீசாக இல்லாம ரியல் போலீஸாக நடிக்க வேண்டிய கதை. 


எங்க அப்பா மாதிரி போலீசாகணுங்ற என்னோட சின்ன வயசு கனவு நிறைவேறல அது சினிமால தற்போது நடந்திருக்கு. மேலதிகாரி பிரபு சாருடன் சேர்ந்து செய்யும் குறும்பு, ஸ்ரீதிவ்யாவுடன் காதல் என படம் முழுக்க ஒரு காமெடி கொண்டாட்டமாதான் இருக்கும்.  


காக்கிசட்டை படத்திற்காக கொஞ்சம் வெயிட் போட்டு பிட்டாகி போலீஸ் டிரஸ் போட்டு பார்த்து எனக்கே திருப்தியான பிறகுதான் ஷூட்டிங்கே போனேன். 


இது போலீஸ் படமாக இருந்தாலும் எனது எல்லாப் படத்தை போன்று இது என்னோட படமாக இருக்கும், தியேட்டருக்கு வர்றவங்களை டைட்டில்லேருந்து எண்ட் கார்ட் வரைக்கும் ரசிக்க வைக்கிற படமா இருக்கும் என்கிறார் சொல்கிறார் சிவகார்த்திகேயன்...

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்