Home  |  திரை உலகம்

படபிடிப்பின் போது நிஜமாக அழுதார் சிவகார்த்திகேயன் !

பாண்டிராஜ் இயக்கத்தில் விமல், சிவ கார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா ஆகியோர் நடிக்கும் படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா. இந்த படத்தில் சிவ கார்த்திகேயனுக்கு அப்பாவாக மனோஜ் குமார் நடிக்கிறார். இந்த படத்தின் சில காட்சிகளுக்காக திருச்சியில்  அண்மையில் ஷூட்டிங் நடந்தது. அப்போது மனோஜ் குமார் தான் சிறு வயதில் பட்ட கஷ்டங்களை தனது மகனிடம் உணர்ச்சி பொங்க கூறுவது போலவும் அதை நன்றாக கேட்டுவிட்டு சிவகார்த்திகேயன் சிரித்துக் கொண்டே ஓடுவது போன்று காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சியில் நடித்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன் சிரிப்பதற்கு பதிலாக அழுது விட்டார். இதை பார்த்து அதிர்ந்த படக் குழுவினர் சிவகார்த்திகேயனை சமாதனப் படுத்தினர். பிறகு காரணம் கேட்டதற்கு மனோஜ் குமார் உணர்ச்சி பொங்க பேசியதைக் கேட்டதும் தனது அப்பா ஞாபகம் வந்துவிட்டதாக அவர் கூறினார். அப்புறம் அவரை சமாதானப்படுத்தி சில மணி நேரம் கழித்து அந்த காட்சி படமாக்கப்பட்டது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்