Home  |  திரை உலகம்

அஜித்திடம் இருந்து எஸ்கேப் ஆக துடிக்கும் இயக்குனர் சிவா

அஜித்திடம் இருந்து எஸ்கேப் ஆக துடிக்கும் இயக்குனர் சிவா

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என்று தொடர்ந்து மூன்று படங்கள் அஜித்தை வைத்து இயக்கிய சிவா, பரவாயில்லை, கடைசியாக வந்த விவேகம் விமர்சன ரீதியாக மிகவும் மோசமான விமர்சனங்களை பார்த்தாலும் வசூல் ரீதியாக தயாரிப்பாளரை கொஞ்சம் தப்பிக்க தான் வைத்தார்.

அஜித்தின் இந்த ஆறுதலோடு, அடுத்த படத்தின் வாய்ப்பும் சிவாவுக்கே என்று கோலிவுட்டில் தகவல் கசிந்துள்ள நிலையில், அஜித்திடம் இருந்து சிவா எஸ்கேப்பாகும் முடிவுக்கு வந்துவிட்டாராம். இதற்கு காரணம் அவரது நல விரும்பி நண்பர்களின் அட்வைஸ் தானாம்.

குறிப்பாக பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்து பெரிய அளவில் நஷ்ட்டம் அடைந்ததோடு, அவமானமும் பட்ட சில இயக்குநர்கள், சிவாவை தொடர்புக்கொண்டு, அஜித் உங்களுக்கு அடுத்த படம் கொடுப்பதாக சொல்லியிருக்கலாம். ஏன், அது உண்மையாக கூட இருக்கலாம். ஆனால், அதை நம்பி காத்திருந்து ஏமாற வேண்டாம், சட்டென்று சின்ன ஹீரோ யாரையாவது வைத்து ஒரு படத்தை கொடுங்க, அது தான் நம்மை மீண்டும் நிரூபிப்பதற்கான கருவியாக இருக்கும். அதைவிட்டுட்டு வருட கணக்கில் காத்திருந்து கிடப்பில் போட்ட அரசு திட்டம் போல ஆகிவிடாதிங்க, என்று அட்வைஸ் பண்ணியிருக்காங்களாம்.

அனுபவத்துடன் அடியும் பட்ட அந்த இயக்குநர்களின் அட்வைஸை ஏற்றுக்கொண்ட இயக்குநர் சிவா, தற்போது அஜித்திடம் இருந்து எஸ்கேப்பாகி தனது அடுத்த கதையை சின்ன ஹீரோ யாரிடமாவது கொடுக்க முடிவு செய்துவிட்டாராம்.

Siva escape
  05 Sep 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்