Home  |  திரை உலகம்

வீரம் படம் குறித்து இயக்குனர் சிவாவின் பதில்கள் !!

அஜீத் நடித்த வீரம் படம் வரும் 10ந்தேதி ரிலீசாவதையொட்டி, வீரம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு இயக்குனர் சிவா பதிலளித்தார். அதன் விவரம் பின்வருமாறு, 

 

’வீரம்’படம் ’முரட்டுக்காளை’ படத்தின் சாயலில் இருக்கும் என்கிறார்களே?

 

நிச்சயமாக எந்த படத்தின் பாதிப்பும் இல்லை. அண்ணன்-தம்பிகளின் கதை என்பதால், அப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் எந்த படத்தின் சாயலும் இதில் இருக்காது.

 

’வீரம்’  ஒரு மலையாள படத்தை தழுவிய கதை என்கிறார்களே? அது தவறான தகவல். ’வீரம்,’ நேரடி தமிழ் படம்.

 

அஜீத்குமாருடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி? 

 

அது, ஒரு சந்தோஷமான அனுபவம். அஜீத் துணிச்சல் மிகுந்தவர் என்பது நிறைய பேருக்கு தெரியும். இந்த படத்தில் இடம்பெறும் பயங்கரமான ஒரு ரயில் சண்டை காட்சியில், ’டூப்’ நடிகரை பயன்படுத்தலாம் என்று நானும், ஸ்டண்ட் மாஸ்டரும் சொன்னோம். அஜீத் ஏற்கவில்லை. ’’அவருக்கு நடப்பது எனக்கு நடக்கட்டும்’’ என்று துணிச்சலுடன் அந்த காட்சியில் நடித்தார்.

 

தமன்னாவுக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளதே அது பற்றி, 

 

இதுவரை தமன்னா நடித்த படங்களில் இல்லாத அளவுக்கு, ’வீரம்’ படத்தில் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை தமன்னாவே என்னிடம் தெரிவித்தார். ’’இந்த படம் எனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று நம்புகிறேன்’’ என்று கூறினார்.

 

படம் எவ்வளவு நேரம் ஓடும் ?

 

2 மணி நேரமும், 35 நிமிடங்களும் படம் ஓடும்.

 

இவ்வாறு சிவா பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், ஒளிபதிவாளர் என பலர் கலந்து கொண்டனர்.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்