Home  |  திரை உலகம்

சிங்கம் 2 ( Singam II )

சிங்கம் 2 ( Singam II )

Movie Name: Singam II சிங்கம் 2
Hero: SURIYA
Heroine: ANUSHKA SHETTY
Year: 2013
Movie Director: HARI
Movie Producer: Prince Media
Music By: DEVI SRI PRASAD


சிங்கம் 1 ல் பிரகாஷ்ராஜை சுட்டுத்தள்ளிவிட்டு படத்தை முடிக்கிறார் சூர்யா. முடியும்போது உள்துறை அமைச்சர் விஜயகுமாரும் இவரும் ஒரு ரோட்டோரம் காரை நிறுத்திவிட்டு குசுகுசுவென டிஸ்கஸ் செய்கிறார்கள். அவரது ஸ்பெஷல் அட்வைசின்பேரில் தூத்துக்குடி பக்கம் ஒதுங்குகிறார் சூர்யா. ஒரு பள்ளியில் என்.சி.சி மாணவர்களுக்கு இன்சார்ஜ் இவர்தான். ஊருக்கு முன் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டதாக சூர்யா நாடகம் போட்டாலும், நிஜத்தில் அவர் மந்திரியின் கண்காணிப்பில் இருக்கும் போலீஸ் அதிகாரிதான். நினைத்த மாதிரியே அங்கு நடக்கும் போதை பொருள் கடத்தல் சம்பவங்களை கண்டு பிடிக்கிறார் சூர்யா.

இன்டர்நேஷனல் தாதா ஒருவன்தான் இதற்கெல்லாம் லீடர் என்பதையும் அறிந்து அவனை பிடிக்க களம் இறங்குகிறார். ஒரு புயலை யூனிபார்முக்குள் அடக்கி வைத்த அவ்வளவு பரபர சூர்யா, நம்மையறியாமல் நம்மை கவர்கிறார். இன்டர்வெல்லுக்கு சற்று முன் பிடிபடும் இன்டர்நேஷனல் தாதா டேனியை விசாரிக்காமல் கடற்கரையோடு அனுப்பிவிடுவாரோ என்று பதைபதைக்க காத்திருந்தால், சட்டென சிக்குகிறான் டேனி. இந்தியன் போலீசையா கேவலமா திட்டுற என்று அவனது பிடறியில் இடி இறக்கும் சூர்யா, ஸ்டேஷனுக்கு இழுத்துச் செல்கிற காட்சி ஒன்று போதும், லாக்கப்பிலிருந்து தப்பிச் செல்லும் டேனிக்கும் சூர்யாவுக்குமான போர்!

சௌத் ஆப்பிரிக்கா வரை விரட்டிச் சென்று தவிடு பொடி ஆக்குகிற சூர்யாவை லாஜிக்கையெல்லாம் மறந்து ரசிக்க வைக்கிறார் ஹரி. அப்பா ராதாரவியுடன் போனில் பேசும்போது மட்டும் ஒரே ஒரு காட்சியில் சற்று அமைதியாக இருக்கிறது சூர்யாவின் வேகம். ஸ்கூலில் கொஸ்டீன் பேப்பரை அவுட்டாக்கிவிடும் ஹன்சிகா, 'படிக்கிற வாத்தியாரையே லவ் பண்றீயே, உனக்கெல்லாம் வெட்கமா இல்ல?' என்று சீறுகிற சூர்யா, அனுஷ்கா, சூர்யாவின் மெச்சூர்டு லவ் அழகோ அழகு! அவ்வளவு கூட்டத்திலும் ஒரு சின்ன புன்னகையோடு சூர்யாவை நோக்கிவிட்டு போகிற அனுஷ்காவின் கண்கள் கவிதை.

படத்தில் விவேக் இருக்கிறார். என்னோட வொர்க் பண்ணின பழைய ஆபிசர் எரிமலை எனக்கு வேணும் என்று கேட்டு வாங்குகிறார் சூர்யா. உண்மைதான். நான் கடவுள் ராஜேந்திரன் அடுத்தக்கட்ட வில்லன். புது வில்லன் டேனியின் அலட்சிய சிரிப்பும், அடங்காத முறைப்பும் வில்லன் என்பதையெல்லாம் தாண்டி ரசிக்க வைக்கிறது. அவ்வளவு பெரிய உருவத்தை சூர்யா பந்தாடுவதை ரசிக்க முடிகிறதென்றால் அதற்கு காரணமான ஃபைட் மாஸ்டர், ஹரியின் படங்களில் ப்ரியனின் கேமிரா செம பொறுத்தம் எப்போதுமே.

  16 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்