Home  |  திரை உலகம்

செல்வராகவன் இயக்கும் படத்தில் சிம்பு-திரிஷா!!

செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு-திரிஷா இருவரும் இணையப்போகிறார்கள். ஏற்கனவே, இவர்கள் நடித்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. பிறகு அவர்கள் மீண்டும் ஜோடி சேரவில்லை.

 

சிம்புவுடன் இணையப்போகும் இப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கிறார் திரிஷா. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசியமைக்கிறார். வருண் மணியன் இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 25ம் தேதி துவங்குகிறது.

 

செல்வராகவன், காதல் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர். எனவே, இப்படமும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர் பார்க்க படுகிறது.


அடுத்த கெமிஸ்ட்ரியை ஒர்க்அவுட் பண்ண தயாராகும் சிம்பு-திரிஷா!
கெளதம்மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் காதலர்களாக நடித்த சிம்பு-திரிஷா இருவரும் கொடுத்த அவுட்புட் இளவட்ட ரசிகர்களை உலுக்கி எடுத்தது. அந்த அளவுக்கு காதலின் உச்சம் தொடும் காட்சிகளில் வித்தியாசமான ரொமாண்டிக்கை வெளிப்படுத்தியிருந்தார்கள். ஆனால், அப்படியொரு மெகா ஹிட் படத்தில் நடித்தபோதும் அதையடுத்து அவர்களை யாரும் ஜோடி சேர்க்கவில்லை. பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் அவர்கள் இணையப்போகிறார்கள். அதனால் சிம்பு-திரிஷா இருவரும் மீண்டுமொரு காதல் கவிதை எழுத தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.
என்றென்றும் புன்னகை படத்தையடுத்து ஜெயம்ரவியுடன் பூலோகம் படத்தில் நடித்துள்ள திரிஷா, சிம்புவுடன் இணையப்போகும் இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கிறார். தனக்கான ரசிகர்கள் இன்னும் அப்படியே இருப்பதாக கருதும் அவர், தற்போது களத்தில் நிற்கும் நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வாலை மிஞ்சும் அளவுக்கு ரொமான்ஸை வெளிப்படுத்தி ரசிகர்களின் உதடுகளில் மீண்டும் உச்சரிக்கப்பட வேண்டும் என்று முந்தைய படத்தை விட இப்படத்தில் சிம்புவுடன் இன்னும் காற்றுப்புகா நெருக்கம் காட்டி நடிக்கவும் முடிவெடுத்துள்ளார்.
'இரண்டாம் உலகம்' படத்திற்குப் பிறகு செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு,த்ரிஷா நடிக்கின்றனர். 'விண்ணைத் தாண்டி வருவாயா' வெற்றிக்குப் பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைவதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு செல்வராகவனின் ஃபேவரைட் இசையமைப்பாளர், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரேடியன்ஸ் மீடியா சார்பில் வருண் மணியன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
காதல் கதையாக உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 25ம் தேதி துவங்குகிறது. காதல் கதைகளை இயக்குவதில் செல்வராகவன் கெட்டிக்காரர் என்பது அனைவரும் அறிந்ததே.
சிம்பு, த்ரிஷா ஜோடி, மீண்டும் யுவனுடன் கூட்டணி என ரசிகர்களைக் கவரும் நிறைய விஷயங்கள் இருப்பதால் படத்தைப் பற்றிய பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்