Home  |  திரை உலகம்

யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை துறந்த சிம்பு !!

யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை துறக்க போவதாக நடிகர் சிம்பு பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். 


குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சிம்பு, முதலில் ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்பட்டார்.


கதாநாயகனாக நடிக்க துவங்கியதும் யங் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் சேர்ந்தது. படங்களில் அவரது பெயருக்கு முன் இந்த பட்டம் சேர்க்கப்பட்டது. ரசிகர்களும் ‘யங் சூப்பர் ஸ்டார் சிம்பு’ என்றே போஸ்டர்கள் ஒட்டினர். 


இந்நிலையில், நடிகர் சிம்பு யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை துறக்க முடிவு செய்துள்ளார். 


சமீபகாலமாக ஆன்மீக பணிகளில் சிம்பு தீவிரம் ஆர்வம் காட்டுகிறார். இதனால் அவரது பேச்சிலும் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதுவே பட்டத்தை துறக்க காரணம் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  


இது குறித்து நடிகர் சிம்பு கூறியதாவது, 


யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தேவையற்ற சுமையாக கருதுகிறேன். இந்த சுமையை என் வாழ்வில் இருந்து அகற்ற முடிவு செய்துள்ளேன். 


என் திரை வாழ்வில் நான் முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளேன். என்னுடைய இமேஜ், அது என் ரசிகர்கள் இடையே ஏற்படுத்தும் விளைவுகள் ஆகியவற்றை முக்கியமென உணர்ந்து வருகிறேன்.


சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவன் என்ற முறையில் முக்கியத்துவம் இல்லாத பட்டங்கள் வளரும் கலைஞனுக்கு அவசியமற்றது என கருத ஆரம்பித்து இருக்கிறேன். 


திரையில் என் மீது அன்பு கொண்டவர்களை தாண்டி எல்லோருடைய அன்பையும் மரியாதையையும் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது.


பட்டம் துறப்பது என்ற என்னுடைய இந்த முடிவு அதற்காக முதல் வழியாகும். என்னுடன் என்றென்றும் இருக்கும் இருக்கப்போகும் என் இனிய ரசிகர்கள் இந்த முடிவை ஏற்று ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்