Home  |  திரை உலகம்

சிகரம் தொடு ( Sigaram Thodu )

சிகரம் தொடு ( Sigaram Thodu )

Movie Name: Sigaram Thodu சிகரம் தொடு
Hero: Vikram Prabhu
Heroine: Monal Gajjar
Year: 2014
Movie Director: GAURAV
Movie Producer: UTV MOTION PICTURES
Music By: D.IMAAN


நேர்மையான போலீஸ் அதிகாரியான சத்யராஜ் ஒரு கலவரத்தின்போது அரிவாளால் வெட்டப்பட்டு தனது ஒரு காலை இழக்கிறார். இப்போது குற்ற ஆவணக் காப்பகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது ஒரே மகன் விக்ரம் பிரபு. இவரை எப்படியாவது தன்னை போலவே ஒரு சிறந்த போலீஸ் ஆபிஸராக உருவாக்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார் சத்யராஜ். ஆனால் மகன் விக்ரம்பிரபுவுக்கோ ஏதாவது ஒரு வங்கியில் தலைவர் பதவிவரையிலும் எட்டிப் பிடித்துவிட வேண்டும் என்று மனம் நிறைய ஆசை. இந்த நேரத்தில் பக்கத்து வீட்டு தாத்தா வட நாட்டு சுற்றுலாவுக்கு போகும்போது துணைக்கு விக்ரம் பிரபுவையும் அழைத்துச் செல்கிறார். அப்போது அதே டூரில் வரும் ஹீரோயின் மோனலை பார்த்தவுடன் பிரபுவுக்கு காதல் பிறக்கிறது.. துவக்கத்தில் வரும் ஒரு சின்ன சண்டைக்கு பின்பு, சமாதானக் கொடியையெல்லாம் பறக்கவிட்டு கடைசியில் அது காதலில் போய் முடிகிறது.

மோனலுக்கு போலீஸ் வேலையே பிடிக்காது, போலீஸ் மாப்பிள்ளையே வேண்டாம் என்று நினைப்பவர். தானும் போலீஸ் வேலைக்கு போகப் போவதில்லை. ஆனால் போலீஸ் வேலை கன்பார்மாகி டிரெயினிங்கிற்கு அழைப்பு கடிதம் வருகிறது. மோனலிடம் பொய் சொல்லிவிட்டு டிரெயினிங்கிற்கு செல்கிறார். எப்பாடுபட்டாவது நிறைய சொதப்பல்களில் ஈடுபட்டால் தன்னை வெளியே அனுப்பி விடுவார்கள் என்று நினைக்கிறார் பிரபு. ஆனால் காலேஜ் பிரின்ஸிபால் மோனலின் அப்பா என்பது பின்புதான் பிரபுவுக்கே தெரிகிறது. “1 மாசம் டைம் தரேன்.. ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல டிரெயினிங் எஸ்.ஐ.யா சேர்ந்து வேலைய பாரு.. ஒரு மாசம் கழிச்சும் வேலை பிடிக்கலைன்னா சொல்லு.. நான் உன்னை விட்டுடறேன். என் பொண்ணையும் உனக்குக் கட்டித் தரேன்…” என்கிறார் மோனலின் அப்பா.

அவர் சொல்படியே ஒட்டேரி காவல் நிலையத்தில் பயிற்சி எஸ்.ஐ.யாக சேர்கிறார் பிரபு. அப்போதுதான் சென்னையின் புறநகர்ப் பகுதிகளின் ஏடிஎம்களில் போலி கார்டுகளை பயன்படுத்தி பணம் கொள்ளையடிப்பது அதிகமாகி வருகிறது. சரியாக ஒரு மாதம் முடிய இருக்கும் நாளில் அந்தக் கொள்ளையர்கள் சத்யராஜின் கண் பார்வையில் படுகிறார்கள். அவர்களுடன் சண்டையிட்டு பக்கத்தில் இருப்பவர்கள் துணையுடன் அவர்களைப் பிடிக்கிறார் சத்யராஜ். இப்போது இவர்களை விசாரிக்க வேண்டிய பொறுப்பும், காலையில் கோர்ட்டுக்கு அழைத்துப் போய் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பும் பிரபுவுக்கு இருக்க. பிரபு காதலியைத் தேடி சினிமாவுக்குச் செல்ல.. இங்கே கிடைத்த சந்தர்ப்பத்தில் குற்றவாளிகள் இருவரும் தப்பித்துச் செல்கிறார்கள். போகும்போது சத்யராஜ் எதேச்சையாக அங்கே வந்துவிட அவரை சுட்டுவிட்டு தப்பிக்கிறார்கள். இப்போது பிரபுவின் மன நிலைமை மாறுகிறது.. போலீஸ் வேலையே வேண்டாம் என்பவர் தன்னுடைய தந்தையை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களை பிடிக்க வேண்டி வெறியாகிறார். பிடித்தாரா..? இல்லையா..? எப்படி பிடித்தார் என்பதுதான் இந்த திரில்லர் கதையின் முடிவு.

வெகு நாட்களுக்கு பிறகு சத்யராஜுக்கு ஒரு சிறப்பான வேடம்.. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் பேசும்போதே தனது கேரக்டர் வெளிப்படுத்தும் விதமாக பொறுப்பாக பேசும்விதமும், தனது மகன் மீது அவர் வைத்திருக்கும் அந்த பாசத்தையும், நம்பிக்கையையும் காட்டும்விதமும் அழகாக பதிவாகியிருக்கிறது..!மோனல் கஜ்ஜார்.. ஒரு பக்கம் பார்த்தால் பிடிக்காததுபோலத்தான் தோன்றுகிறது.. ‘டக்கு டக்கு’ பாடலின்போது மட்டும் பிடித்திருக்கிறது. அதிகமான, அழுத்தமான காட்சிகள் இல்லை. ஏடிஎம் கொள்ளை எப்படி நடக்கிறது என்பதை இன்றைக்கு தமிழகமே இந்த ஒரு திரைப்படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு டீடெயிலாக இறங்கி அடித்திருக்கிறார் இயக்குநர் கெளரவ். கிளைமாக்ஸில் வேகம் கூடி எப்படித்தான் பிடிக்கப் போகிறார்கள் என்கிற ஒரு ஆர்வத்தை உருவாக்கியதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் கெளரவ். அந்த திரில்லிங் அனுபவம் நிசமாகவே தியேட்டரில் கிடைத்தது. இத்தனை மாதங்களாக தேடி வரும் கொள்ளையர்களை அவ்வளவு அலட்சியமாக லாக்கப்பில் சும்மாவே அமர வைத்துவிடுவார்களா..? விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவு கச்சிதம்.. இதைவிட பிரவினின் எடிட்டிங் கச்சிதம். படத்தின் பிற்பாதியில் எடிட்டரின் உதவியால் படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்கள்.. இமானின் இசையில் ‘டக்கு டக்கு’, ‘சீனு சீனு’ பாடல்கள் ஓகே ரகம். பாடல்களைவிடவும் படமாக்கியவிதமும் அழகாகவும், அருமையாகவும் இருக்கிறது. ‘அன்புள்ள அப்பா’ பாடல் எதிர்பாராத ஒன்று..!

  15 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்