Home  |  ஆன்மிகம்

அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில், கஞ்சமலை, சேலம்

Name: அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில்
Temple Type: சிவன் கோயில்
Mulavar: சித்தேஸ்வரர்
Year: 1000-2000 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில், கஞ்சமலை- சேலம்
Town: கஞ்சமலை
District: சேலம் [ Salem ]-.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

சித்தர் கோயில் ஒன்றில், கிரிவலம் நடப்பது சிறப்பம்சமாகும். இக்கோயிலுக்கு அமாவாசையன்று தான் பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர்."அமாவாசை கோயில்' என்ற பெயர் கூட இதற்கு உண்டு. தீராத நோயுள்ளவர்கள் அன்று சித்தேஸ்வரரை வணங்கி, கோயிலில் உள்ள தீர்த்தத்தை தலையில் தெளித்து நலம் பெற வேண்டலாம். பவுர்ணமியன்று பக்தர்கள் மாலை 5 மணியில் இருந்து கிரிவலம் துவங்குகிறார்கள்.

18 கி.மீ., சுற்றளவுள்ள மலையை சித்தேஸ்வரர் நாமம் சொல்லி சுற்றி வருகின்றனர். இரவு வேளையில், சுற்றுச்சூழல் மாசில்லாத இம்மலையைச் சுற்றி வருவதன் மூலம் மூலிகை காற்று பட்டு, பல நோய்கள் தீர்வதாக நம்புகின்றனர். இந்த கோயில் அருகே ஓடும் பொன்னி ஓடை எக்காலமும் வற்றுவதில்லை. பக்தர்கள் இதில் நீராடுகின்றனர். கோயிலுக்குள் இருக்கும் காந்ததீர்த்த குளத்து நீர் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

இக்குளத்து நீரை தலையில் தெளித்தாலே வியாதிகள் தீரும் என்பது நம்பிக்கை. முகத்தில் பரு உள்ளவர்கள் உப்பு, மிளகு வாங்கிப் போட்டு இந்த குளத்து நீரால் முகம் கழுவினால் பரு வருவதில்லை என்கிறார்கள். சில டாக்டர்களும் இங்கு போகச் சொல்லி நோயாளிகளை பரிந்துரை செய்வதாக சொல்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர்.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!