Home  |  ஆன்மிகம்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராசிபுரம், நாமக்கல்

Name: அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
Temple Type: சிவன் கோயில்
Mulavar: கைலாசநாதர்
Year: 500 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராசிபுரம்- 637 408. நாமக்கல் மாவட்டம்.
Town: ராசிபுரம்
District: நாமக்கல் [ Namakkal ]-637 408.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் அம்பு பட்ட தழும்பு இருக்கிறது. மேற்கு நோக்கிய தலம் இது. பொதுவாக சிவராத்திரியின்போது இரவில் சுவாமிக்கு 4 கால பூஜைதான் நடக்கும். இத்தலத்தில் ஆறு கால பூஜை செய்கிறார்கள்.

அம்பாள் அறம்வளர்த்தநாயகி தனிச்சன்னதியில் மேற்கு நோக்கி காட்சி தருகிறாள். இவளுக்கு முன்புறம் மகாமேரு உள்ளது. இவளது சன்னதியில் பவுர்ணமியன்று காலையில் விசேஷ ஹோமம் நடக்கிறது.இக்கோயில் பிரகார வலத்தை துவங்கும்போது முதலில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாள் சன்னதியும், பிரகாரத்தின் முடிவில் ராமேஸ்வர், பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதியும் அமைக்கப்பட்டிருக்கிறது.

விஸ்வநாதர் சன்னதி விமானம், காசி தலத்தைப் போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு காசி, ராமேஸ்வம் தலங்களில் அருளும் சிவனை இங்கு தரிசிக்கும் விதமாக இக்கோயில் அமைக்கப்பட்டிப்பது விசேஷமான சிறப்பு.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!