Home  |  திரை உலகம்

ஷங்கர் - ரஜினி கூட்டணியில் பிரமாண்டமாய் உருவாக இருக்கும் எந்திரன் 2 !!

ஷங்கர் - ரஜினி கூட்டணியில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவான படம் எந்திரன். 


இந்த படத்தில் ரஜினி சிட்டி ரோபோவாகவும், வசீகரன் என்ற விஞ்ஞானியாகவும் இரட்டை வேடங்களில் இப்படத்தில் நடித்திருந்தார். 


ரஜினிக்கு ஜோடியாக இப்படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். 


ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் மெகா ஹிட் ஆனது. 


மீண்டும் ஷங்கரும், ரஜினியும் இணைந்து தற்போது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


விக்ரம் நடிப்பில் எடுக்கப்பட்ட ஐ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் தற்போது பிஸியாக இருக்கிறார் இயக்குநர் ஷங்கர். 


அதேபோல் கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் லிங்கா படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. 


இந்த இரண்டு படங்களும் வெளியான பிறகு இவர்கள் மீண்டும் இணைகிற எந்திரன் 2 படம் தொடங்கப்படவிருக்கிறது. 


சுமார் 240 கோடி செலவில் தயாராக உள்ள இப்படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது.


விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்