Home  |  திரை உலகம்

மே மாதத்தில் வெளியாகுமா ஷங்கரின் ஐ !!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கி வரும் ஐ படம் மே மாதத்தில் வெளியாவது சந்தேகம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் - எமி ஜாக்சன் நடித்து வரும் படம் ஐ. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடந்து வருகிறது. இதில் விக்ரம் உடல் மெலிந்த நோஞ்சான் - சாதாரண தோற்றம் என இரு பரிமாணங்களில் தோன்றுகிறார். 


சுரேஷ்கோபி, சந்தானம், பவர் ஸ்டார் ஆகியோரும் நடிக்கின்றனர். 


ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். 


பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். 


‘ஐ' பட இசை வெளியீட்டை கனடாவில் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் பங்கேற்கின்றனர். அர்னால்டு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இவ்வளவு ஏற்பாடுகள் நடந்தாலும், இன்னும் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு முடியவில்லையாம். 


படத்தை எப்படியாவது மே மாதம் வெளியிட்டுவிடத் திட்டமிட்டிருந்தனராம். ஆனால் மே மாதத்தில் ரஜினியின் கோச்சடையான் வெளியாகிறது. இன்னொரு பக்கம், கமலின் விஸ்வரூபமும் மே இறுதிக்குள் வெளியாகக் கூடும் என்கிறார்கள். இன்னும் படப்பிடிப்பே முடியாத நிலையில் மே இறுதிக்குள் படம் வெளியாவது கஷ்டம் என்கிறார்கள் படக்குழுவைச் சேர்ந்தவர்கள். 


அனேகமாக ஜூன் முதல் வாரத்தில் ஐ படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்