Home  |  நாட்டு நடப்பு

அரை இறுதி போட்டி - இந்தியா vs ஆஸி !!!

அரை இறுதி போட்டி - இந்தியா vs ஆஸி !!!

உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது


ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வந்த போட்டிகளில் நேற்று நடைபெற்ற 2-வது காலிறுதி போட்டியில் இந்திய அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

 

இன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.


எனவே உலக்கோப்பை கால அட்டவணைப்படி இரண்டாவது காலிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணியும்,
மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் அணியும் மோத வேண்டும்.

 

எனவே இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் வரும் 26-ந்தேதி வியாழக்கிழமை மோத இருக்கின்றன.
இந்த போட்டி ஆஸ்ட்ரேலியா சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.


இந்தியா 6 லீக் போட்டி, ஒரு காலிறுதி என 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.
மேலும், எதிர் அணியின் 70 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளது. அதே போல், முதலில் பேட்டிங் செய்தபோது அனைத்து போட்டியிலும் 300 ரன்களை தாண்டியுள்ளது. முதலில் பந்து வீசும்போது எதிரணிகளை 300 ரன்களுக்குள் சுருட்டியுள்ளது. இதன் படி நமது இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறந்து காணப்படுகிறது.


போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றாலும் இந்தியா விளையாடும்போது மைதானத்தில் இந்திய ரசிகர்களே நிறைந்து காணப்படுகிறார்கள். இது இந்தியாவிற்கு கூடுதல் பலமாகும்.


ஆஸ்திரேலியா 6 லீக், ஒரு காலிறுதி என 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. அந்த அணி நியூசிலாந்திற்கு எதிராக 150 ரன்னில் சுருண்டது. மற்றபடி அந்த அணி சிறப்பாக விளையாடி உள்ளது. அந்த அணியில் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் அதிகம் உள்ளனர்.

பொதுவாக போட்டியின் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா வெல்லும் என நம்புவோம் . நாளை நமதே !!

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?