Home  |  திரை உலகம்

நான் அடுத்த ஜென்மத்தில் தமிழனாக பிறக்க வேண்டும் - பீகார் நடிகரின் உருக்கமான பேச்சு !!

கே.பாக்யராஜ் இயக்கிய இது நம்ம ஆளு என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர், சத்யபிரகாஷ். 


இதனை தொடர்ந்து, கோல்மால், சீனாதானா போன்ற படங்களில் வில்லானாக நடித்துள்ளார். மேலும் இவர் தற்போது தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிப் படங்களில் நடித்து வருகிறார். 


சமீபத்தில், இவர் தெலுங்கில் வில்லனாக நடித்த அவதாரம் படம் தமிழில் மீண்டும் அம்மன் என்ற பெயரில் வெளிவருகிறது. இதன் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. 


இதில் கலந்து கொண்ட சத்யபிரகாஷ் பேசியதாவது, 


நான் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னை இயக்குனர் பாக்யராஜ் சார் தான் "இது நம்ம ஆளு" படத்துல வில்லனாக நடிக்க வச்சார். அவர் அன்று போட்ட பிச்சையில் இன்னிக்கு நான் பத்து லாங்குவேஜ் படத்துல நடிக்கிறேன். தெலுங்கு இந்தி, கன்னடம் போஜ்புரி, இங்கிலீஸ், பீகாரின்னு எல்லா மொழியிலேயும் நடிக்கிறேன்.


நான் பீகார்காரனாக இருந்தாலும் எங்க போனாலும், நான் மெட்ராசுன்னுதான் சொல்லுவேன். நான் ஒரு ஹாலிவுட் படத்துல நடிச்சேன். அதோட பிரிமியர் ஷோவுக்கு போனேன். அங்க நான் மெட்ராசுக்காரன்னு சொன்னதும் கட்டிப்புடிச்சிக்கிட்டாங்க. நீங்க மெட்ராசான்னு ஆச்சர்யப்பட்டாங்க. 


அந்தளவுக்கு இந்த ஊருக்கு பெருமை இருக்கு. எனக்கு அடுத்த ஜென்மம் இருக்கா இல்லியான்னு தெரியாது. ஒரு வேளை இருந்தா இந்த மெட்ராசுல பொறக்கணும், தமிழ் படங்கள்ல நடிக்கணும். அதான் என்னோட ஆசை. கடவுள்கிட்ட அதுக்குத்தான் தினமும் ஃபிரே பண்ணிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


இந்த விழாவில், கே.பாக்யராஜ், தேனப்பன், பட்டியல் சேகர். ஏஆர்கே.ராஜராஜா உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்