Home  |  திரை உலகம்

விரைவில் தயாராக இருக்கும் சதுரங்க வேட்டை பார்ட்-2 !!

கடந்த ஜூலை மாதம் வெளியாகி வசூலை வாரிக் குவித்த படங்களில் சதுரங்க வேட்டையும் ஒன்று. 


மக்களின் அன்றாட வாழ்வில் சந்தித்து வந்த ஒவ்வொரு மோசடியும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். 


வினோத் என்ற புதுமுக இயக்குநர் இந்த படத்தை இயக்கி உள்ளார். 


இந்த வருடத்தில் வெளிவந்த படங்களில் மிக முக்கியமான படமாக கருதப்படும் 'சதுரங்கை வேட்டை' படத்தை நடிகர், இயக்குநர் மனோபாலா தயாரித்தார். 


இப்படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் திரையிடப்பட்ட டிரெய்லரை பார்த்த திரையுலக பிரமுகர்கள் படத்தைப் பாராட்டித் தள்ளினார்கள். அதை வைத்து சதுரங்க வேட்டை படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டு வசூலை வாரிக்குவித்தது. 


சதுரங்க வேட்டை படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இயக்குநர் வினோத், தற்போது மூன்று கதைகளை தயார் செய்து வைத்திருக்கிறாராம். அதில் ஒரு கதை 'சதுரங்க வேட்டை'யின் இரண்டாம் பாகமாம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவும், அதைவிட சுவாரஸ்யமாகவும் அப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி வருகிறாராம் வினோத். 


சதுரங்க வேட்டை பார்ட் -2வில் முன்னணி கதாநாயகன் ஒருவரை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம் படத் தயாரிப்பு குழுவினர்.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்