Home  |  திரை உலகம்

சதுரங்க வேட்டை ( Sathuranga Vettai )

சதுரங்க வேட்டை ( Sathuranga Vettai  )

Movie Name: Sathuranga Vettai சதுரங்க வேட்டை
Hero: NATARAJAN SUBRAMANIAM
Heroine: Ishara Nair
Year: 2014
Movie Director: H. Vinoth
Movie Producer: SR Cinema
Music By: Sean Roldan


ஒரு சாதாரண பாம்பை மருத்துவ குணம் கொண்ட பாம்பு, இதன் மூலம் லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி இளவரசிடமிருந்து 10 லட்ச ரூபாய்க்கு விற்று இந்த ஊரை விட்டு கிளம்புகிறார். பிறகு எம்.எல்.எம் என்று ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அதில் பல பேரை இணைத்து பல லட்சங்களை அபேஸ் செய்கிறார். பாத்ரூம் குழாயில் தண்ணீரை பிடித்து அதை அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட மூலிகை தண்ணீர் என்று சொல்லி விற்பனை செய்கிறார். மக்களும் அதை ஆயிரம் ஆயிரமாக கொடுத்து வாங்குகிறார்கள்.

இதனிடையே நாயகி இஷாரா, அதே நிறுவனத்தில் வேலைக்கு சேருகிறார். நட்டியைப் பற்றி தெரியாத இஷாரா, நடராஜிடம் தனக்கு தெரிந்த அனாதை குழந்தைகள் காப்பகத்திற்கு உதவுமாறு கூறுகிறார். அதற்கு சம்மதம் தெரிவித்து அனாதை குழந்தைகள் காப்பகத்திற்கு உதவி அந்த உதவியையும் தனது ஏமாற்று வேலைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார். இதனை அறியாத இஷாரா நட்டியை ஒரு தலையாக காதலிக்க தொடங்குகிறார். இந்நிலையில் நட்டியின் நிறுவனத்தின் மீது சிலருக்கு சந்தேகம் வர அங்கிருந்து பணத்தை சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகும் போது, தான் ஏன் இப்படி மற்றவர்களை ஏமாற்றுகிறேன் என்பதற்கு ஒரு குட்டி கதையை இஷாராவிடம் சொல்லிவிட்டு விடை பெறுகிறார். ஆனால் நமக்குத்தான் ஒருத்தன் திருந்துனா பிடிக்காதே, மீண்டும் நட்டியை தொழிலுக்கு அழைத்துச் செல்ல இவனை தேடி ஒரு கும்பல் வருகிறது. வந்த கும்பலிடம் சிக்கி நட்டி என்ன ஆனான்?, இஷாராவின் கதி என்ன? என்பதுதான் மீதி கதை….

பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் செய்திகளாக நாம் அறிந்த விஷயங்களை வைத்துக்கொண்டு, விறுவிறுப்பான திரைகதையோடு, சுவாரஸ்யமான காட்சிகளின் மூலம் இந்த ’சதுரங்க வேட்டை’ உருவாக்கப்பட்டுள்ளது.
பிறரை ஏமாற்றும் காட்சிகளிலும், தன் ஆட்களுடன் ப்ளான் போடும் நேரங்களிலும் அல்லாது அனஸ்வரா உடனான காதல் காட்சிகளிலும் நேர்த்தியாக நடித்திருக்கிறார்.


‘நூறு ரூபா நோட்டை எண்ணி சலிச்சிருச்சி’, ‘அவரை ஏமாத்தற மாதிரி கனவு கண்டா கூட கனவுலயே மன்னிப்பு கேட்டுரு’ என ஆங்காங்கே அற்புதமாய் செதுக்கப்பட்டு இருக்கும் வசனங்கள், நல்ல துணை நடிகர்கள் தேர்வு மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதை என ரசிகர்களை கட்டிப்போடுகிறார் இயக்குனர்.

 

  15 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்-முருகதாஸ் மோதல் உறுதி?
சச்சின் பல கோடி கனவுகள்-திரைவிமர்சனம்!
தொண்டன் திரைவிமர்சனம்!
ரஜினியின் காலா பட தலைப்பின் அர்த்தம் என்ன தெரியுமா?
ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை -
மோசமான சாதனைகளில் அஜித்தின் இரண்டு படங்கள்
காலா டைட்டிலில் இதை கவனித்தீர்களா, இதெல்லாம் என்ன குறியீடு தெரியுமா?
விஜய் மகன் புகழை தடுத்த விஜய் – கண்டிக்கத்தக்கது
விவேகம் படத்தில் ஒரு காட்சி வரும்பாருங்க, செம மாஸ்- படத்தை பற்றி காஜல் அகர்வால் கூறிய சுவாரஸ்யம்
கைதாவாரா நடிகர் சூர்யா?: தப்பிக்க வழி இருக்கிறதா?