Home  |  திரை உலகம்

சத்திரம் பேருந்து நிலையம் ( Sathiram Perundhu Nilayam )

சத்திரம் பேருந்து நிலையம் ( Sathiram Perundhu Nilayam )

Movie Name: Sathiram Perundhu Nilayam சத்திரம் பேருந்து நிலையம்
Hero: Roshan
Heroine: Twinkle
Year: 2013
Movie Director: Ravipriyan


டாஸ்மாக்கில் வேலை பார்க்கும் ரோஷனுக்கு நண்பர்கள்தான் எல்லாம். அவர்களில் மிதுன், சுவாதியை காதலிக்கிறார். சுவாதியின் அப்பா கோயில் பூசாரி. தன் மகள் காதலிக்கும் இளைஞன், முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு தடை விதிக்கிறார். மனமுடையும் சுவாதி, தற்கொலை செய்ய முயற்சிக்கிறார். அவரைக் காப்பாற்ற செல்லும்போது விபத்தில் சிக்கும் மிதுன், உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு உடனடியாக தேவைப்படும் குறிப்பிட்ட வகை ரத்தம் ரோஷனுக்கு இருந்தாலும், குடிகாரரான அவர், ரத்தம் கொடுக்க தகுதியில்லாதவர் என்று நிராகரிக்கப்படுகிறார்.

சிகிச்சை பலனின்றி மிதுன் மரணம் அடைகிறார். தன்னால் நண்பனை காப்பாற்ற முடியவில்லையே என்ற வேதனையில் துடிக்கும் ரோஷன், தொடர்ந்து டாஸ்மாக்கில் வேலை பார்த்தாலும் குடிப்பதில்லை. இந்நிலையில், அவரை கல்லூரி மாணவி சாதனா காதலிக்கிறார். தொடர்ந்து குடிப்பவர்களால், ரத்த தானம் செய்ய முடியாது என்ற கருத்தை சொன்னதற்காக இயக்குனரை பாராட்டலாம். புது ஹீரோ ரோஷன், நண்பர்களிடம் உருகி உருகி நட்பு பாராட்டுகிறார். டாஸ்மாக்கில் திருநங்கையிடம் தவறாக நடந்துகொண்ட ரவுடியைப் பஞ்சராக்கி, பிறகு அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைக்கிறார்.

தன்னை ஒருதலையாக காதலிக்கும் ஹீரோயினிடம் முறைப்பு காட்டுகிறார். கடைக்கு ‘சரக்கு’ வாங்க மகளை அனுப்பி வைக்கும் சித்தப்பாவை அடித்து துவைத்து, அட்வைஸ் செய்கிறார். ஹீரோயின் சாதனா, வந்து போகிறார். பூசாரியும், அவரது மகள் சுவாதியும். எப்படி காதலிப்பது என்று இலவசமாக ஆலோசனைகள் வழங்கும் பாண்டியராஜன், கடைசிவரை டாஸ்மாக்கிலேயே காலத்தை ஓட்டுகிறார். முத்துக்காளை, ஓசியில் கட்டிங் போடும் மயில்சாமியின் காமெடி ஆறுதல். ஸ்ரீராமின் பின்னணி இசை . நட்பு, காதல் இரண்டில் எதை மேன்மைப்படுத்துவது என்பதில் இயக்குனர் ரவிப்பிரியன் கண்ணாமூச்சி ஆடியுள்ளார். கதையை நகர்த்த உதவியிருக்கிறது ரவிசுந்தரத்தின் கேமரா.

  16 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்