Home  |  நாட்டு நடப்பு

முதல்வராகிறார் சசிகலா, பா.ஜ.க பிளான் ரெடி, வெயிட்டிங் லிஸ்டில் பன்னீர்?

முதல்வராகிறார் சசிகலா, பா.ஜ.க பிளான் ரெடி, வெயிட்டிங் லிஸ்டில் பன்னீர்?

அதிமுகவின் பொதுச்செயலாளரான சசிகலா தலைமையில் 5ம் தேதி நாளை அனைத்து எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சசிகலா முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வரும் 6ம் தேதி சசிகலா முதல்வராக பதவி ஏற்கவில்லை என்றால், 2018ல் தான் பதவியேற்பார் என்று கார்டன் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அதற்கான முதற்கட்ட பணிகளில் சசிகலா மும்முரமாக இறங்கியுள்ளார்.

முதல்வராக பதவியேற்கும்போது, தனக்கு கட்சிக்குள் எந்த வகையிலும் எதிர்ப்பு வரக் கூடாது என்பதில் மிகவும் கவனமாகவே இருக்கிறார் சசிகலா. அதற்காக ஜெ., ஆதரவாளர்களை ஓரம்கட்டிவிட்டு தனக்கு ஆதரவானவர்களை நியமித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், செங்கோட்டையன், கோகுல இந்திரா, பிவி ரமணா, முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோருக்கு பதவி வழங்கியுள்ளார்.

ஜெ., மறைவுக்கு பிறகு சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த பொன்னையனுக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதனால் பொன்னையன் எதிர்ப்பு தெரிவித்து கட்சி தாவலாமா, தனிக்கட்சி ஆரம்பிக்கலாமா என ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது சசிகலாவால் பொறுப்பு வழங்கப்பட்டவர்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் அதிக செல்வாக்கு பெற்றவர்கள். அந்தந்த பகுதிகளில் உள்ள தொண்டர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் என்பது சசிகலா குடும்பத்தினரின் கணக்கு.

இந்த வகையில் நயினார் நாகேந்திரன் மற்றும் கருப்பசாமி பாண்டியனுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தனக்கு எந்த வகையிலும் அரசு அதிகாரிகள் தடங்கலாக இருக்கக் கூடாது என்பதற்காக, ஜெயலலிதாவுக்கு, நெருக்கமாக இருந்த அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் சசிகலா முதல்வராக பதவியேற்கும்பட்சத்தில், கட்சி உடைவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், அவ்வாறு ஒரு நிலைமை ஏற்படும் பட்சத்தில் பன்னீர்செல்வத்தை பா.ஜ. தன் பக்கம் இழுத்து கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு சசிகலா தரப்புக்கு எதிராக இருக்கும்பட்சத்தில் பா.ஜ தலைமையில் பன்னீர்செல்வத்தை முதல்வராக நியமிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

BJP plan
  04 Feb 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?