Home  |  திரை உலகம்

சரவணன், ஜெய் கூட்டணியில் உருவாகும் வலியவன் !!

எஸ்.கே ஸ்டியோஸ் சார்பில் கே.என்.சம்பத் தயாரிப்பில் நீண்ட பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகும் படம் “வலியவன்”.


ஜெய் மற்றும் ஷர்வானந்த் நடித்த “எங்கேயும் எப்போதும்”, விக்ரம் பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” போன்ற வெற்றி படங்களை இயக்கிய சரவணன் இப்படத்தை இயக்குகிறார்.


வலியவன் படத்தின் கதாநாயகனாக ஜெய் மற்றும் நாயகியாக ஆண்டிரியா நடிக்கின்றனர். இவர்களுடன் அழகம் பெருமாள், “பண்ணையாரும் பத்மினியும்” பாலா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

பெரும் பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை பிரம்மாண்டமான முறையில் இயக்குகிறார் இயக்குனர் சரவணன்.


மென்மையான காதலை மையமாக கொண்ட இத்திரைப்படம், அனைவரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமான முறையில் நேர்த்தியாக எடுக்கப்பட்டு வருகிறது. 


இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து டெல்லியில் நடைபெற்றது. மேலும் படத்தின் முக்கிய காட்சிகள் ஹரித்துவார் மற்றும் குளுமணாலியில் படமாக்க படவுள்ளதாம். .

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்